சிலுக்கு மரமே பாடலுடன் நர்வினி டேரி மற்றும் வசந்த் செல்லத்துரை.
உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தில் பிரதான பாத்திரம் ஏற்று நடித்த நர்வினி டேரி சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பெண்களை முதன்மைப் படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில் தனக்கு வழங்கப்பட்ட பாத்திரத்தை செவ்வனே நடித்துள்ளார் என்று திரையிடப்பட்ட இடமெல்லாம் நர்வினி ரசிகர்களால் பராட்டப்பட்டுள்ளார். வணக்கம் "உயிர் வரை இனித்தாய்" திரைப் படத்தின் ticket (நுழைவுச் சீட்டுகள் ) பெற்று கொள்ள ........0635307671 மற்றும் கலைஞர்கள் ஆதரவாளர்கள் அனைவரும் இவ் திரைப்படத்திற்க்கு ஆதரவு வழங்கி டென்மார்க்கில் இருந்து வருகை தரும் எமது ஈழத்து கலைஞர்களின் முயற்சிகளுக்கு கை கொடுப்போம் . "எமது படைப்புக்களை நாமே பலமாக்குவோம் 20/06/2014 அன்று தமிழிதழ் மற்றும் GTAA இணைந்து நடாத்திய “சாதனைத்தமிழா” கலைஞர்களுக்கான மணிமகுடம் நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது ஐரோப்பிய ரீதியில் வெவ்வேறு நாடுகளிலிருந்து கலைஞர்கள் மற்றும் இந்தியாவிலிருந்து நடுவர்களில் ஒருவரும் சிறப்பு விருந்தினரும் தென்னிந்திய நடிகர் ஈழத்து மைந்தன் ஜெய் ஆகாஷ் அவர்களும் கலந்து நிகழ்வினை சிறபித்தார்கள். டென்மார்க்கில் வாழும் திரு திருமதி ஜெயாஞ்சலி (சுபத்திரா) இரவிசங்கர் தம்பதியினரின் மகன் B.டேரியஸ் அவர்கள் சொல்லிசைப் (RAP) பாடகராக பரிணாமம் பெற்று பிரகாசித்து வருகின்றார். இவரது சகோதரிதான் "உயிர்வரை இனித்தாய்" திரைப் படத்தின் கதாநாயகி, மற்றும் அண்மையில் சிறந்த இயக்குனருக்கான "ஒளிக்கீற்று" விருதையும் பெற்றவர் என்பதை ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். இளையோரினை ஈர்க்கும் ராப் பாடல்கள் பலவற்றை வெளியிட்டுள்ளார். டேரியஸ் அவர்களின் கலைப்பயணம் தொடர்ந்து சிறக்கவும், மேலும் பல புதிய எல்லைகளைத் தாண்டித் தொடரவும் மயிலிட்டி மக்கள் சார்பில் எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அண்மையில் ஜேர்மனியில் இயங்கும் "Tamil Artist Area" எனும் இணையத்திற்கு அவர் அளித்த நேர்காணல் மற்றும் பாடல்களையும் காணலாம். "உயிர்வரை இனித்தாய்" 22 மார்ச் அன்று டென்மார்க் திரையரங்கில் பிரமாண்ட வெளியீட்டு திருவிழா..!2/3/2014 ஈழத்தில் ஒரு சினிமா சரித்திரம்! எங்கள் மயிலிட்டி மண்ணில் பிறந்த மகளின் மகளால் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றோம். நர்வினி டேரி இரவிசங்கர் அவர்கள் பிரான்சின் "ஒளிக்கீற்று" அமைப்பினால் சிறந்த ஈழத்து இயக்குனராகத் தெரிவு செய்யப்பட்டமை அனைவரும் அறிந்ததே! அவர் நடித்த விரைவில் வெளிவரவிருக்கும் "உயிர்வரை இனித்தாய்" திரைப்படத்தின் தொடர் ட்ரெயிலர்களை இணைக்கின்றோம் பார்த்து மகிழ்ந்து உங்கள் ஆதரவையும் வாழ்த்துக்களையும் நமது மண்ணின் மங்கைக்கு வழங்குங்கள்! ஒளிக்கீற்று திரையிசை பாடல் நிகழ்ச்சி புலம்பெயர் தேசங்களில் தமிழர்களின் கலை படைப்பாற்றலுக்கு அமைக்கப்பட்ட களம். பிரான்ஸ் பாரீசில் அனைத்து நாடுகளிலிருந்தும் போட்டியிட்ட நம்மவர்களின் படைப்புக்களில் நமது மயிலிட்டி மகள் நர்வினிடேரி இரவிசங்கர் (மயிலிட்டி பரஞ்சோதி வசீகரனின் பேத்தி) அவர்கள் ஈழத்தின் முதல் பெண் இயக்குனருக்கான "ஒளிக்கீற்று" விருதினை தமதாக்கிக் கொண்டார். இவரது வெற்றியால் மயிலிட்டி பெருமையடைகின்றது், வாழ்த்துக்கள்! |
முகவுரைமயிலிட்டியின் சாதனையாளர்கள் பதிவுகள்
September 2015
முழுப்பதிவுகள் |