தனிமையெனை வாட்டும்போது-----நான்
தலயைணயை நனைப்பதில்லை
உள்ளத்திற்கு உரம்கொடுப்பேன்-----பின்
உசுப்பிடுவேன் என்கற்பனையை
தலயைணயை நனைப்பதில்லை
உள்ளத்திற்கு உரம்கொடுப்பேன்-----பின்
உசுப்பிடுவேன் என்கற்பனையை
சந்தோஷ கடலில் நான்மிதந்தால்----காதல்
சங்கீதம் ஆனதொரு கவிதைசொல்வேன்
சங்கடம் மனதில் நிறைந்திருந்தால்----பலர்
சங்கட படும்படி கவிதைசொல்வேன்
சினம்கொண்டு மட்டும் நானிருந்தால்-----சிலரை
சீண்டி பார்த்தும் கவிதைசொல்வேன்
சிரிப்புடன் மகிழ்ச்சியில் நானிருந்தால்----பலர்
சிந்தனையை தூண்டும் கவிதைசொல்வேன்
கவலைகள் மனதில் நிறைந்திருந்தால்-----அந்த
கடவுளையும் கடிந்து கவிதைசொல்வேன்
கடந்த காலங்கள் நினைவில்வந்தால்----நான்
கஷ்டங்கள் பட்டதை கவிதையில்சொல்வேன்
காலத்தின் கட்டாய சூழலுக்கு-----என்
கற்பனை அவ்வாறு அமைவதுண்டு
எதிர்ப்பை பற்றிநான் கவலைப்படேன்----என்
எண்ணத்தில் தோன்றுவதை எழுதிடுவேன்.
மயிலை துரை
சங்கீதம் ஆனதொரு கவிதைசொல்வேன்
சங்கடம் மனதில் நிறைந்திருந்தால்----பலர்
சங்கட படும்படி கவிதைசொல்வேன்
சினம்கொண்டு மட்டும் நானிருந்தால்-----சிலரை
சீண்டி பார்த்தும் கவிதைசொல்வேன்
சிரிப்புடன் மகிழ்ச்சியில் நானிருந்தால்----பலர்
சிந்தனையை தூண்டும் கவிதைசொல்வேன்
கவலைகள் மனதில் நிறைந்திருந்தால்-----அந்த
கடவுளையும் கடிந்து கவிதைசொல்வேன்
கடந்த காலங்கள் நினைவில்வந்தால்----நான்
கஷ்டங்கள் பட்டதை கவிதையில்சொல்வேன்
காலத்தின் கட்டாய சூழலுக்கு-----என்
கற்பனை அவ்வாறு அமைவதுண்டு
எதிர்ப்பை பற்றிநான் கவலைப்படேன்----என்
எண்ணத்தில் தோன்றுவதை எழுதிடுவேன்.
மயிலை துரை
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.