மயிலை மண்ணேயுன் சிறப்பை விவரிக்க எந்தனுக்கும் ஆசையுண்டு
அருண்குமார் தம்பியின்று ஆசையுடன் கேட்டபோது எழுதநான் விருப்பப்பட்டேன்

ஏடெடுத்து படித்ததெந்தன் ரோமன் கத்தோலிக்க பாடசாலையை எழுதிவிடவா!
கரையா குளத்தினிலே சொத்தி புளியினிலே விளையாடியதை எழுதிவிடவா!
விதானையார் நெல்லுவயலில் பந்தடித்து விளையாடி மகிழ்ந்ததை எழுதிவிடவா!
தாடிவேலர் மாமாவின் விளாத்தி மரத்திற்கு கல்லெறிவதை எழுதிவிடவா!
வெள்ளை கடற்கையில் ஒல்லிகட்டி நீந்திநாம் பயின்றதை எழுதிவிடவா!
பாவட்டம் பத்தைக்குள்ளே ஒளிந்திருந்து பீடிகுடித்த கதைகளை எழுதிவிடவா!
வெள்ளிக் கிழமைகளில் பிள்ளையார் கோவில் மோதகத்தின் ருசிதனை எழுதிவிடா!
மாப்பாணி காடுசென்று புளியமரத்து பழங்களை தின்பதை எழுதிவிடவா!
அறியாத வயதினிலே அநியாயம் செய்தவற்றை என்னவென்று எழுதிவிடவா!
அத்தனையும் நாம்மறந்து ஆளாய் வளர்ந்துவிட்டோம் இன்று எம்மண்ணில் வாழ முடியாதந்த கவலைகளை எழுதிவிடாவா!
அங்கிருக்க முடியாமல் அண்டைநாடு தப்பிவந்த கதையினை எழுதிவிடவா!
அடிமை விலங்குடைத்து எம்மண்ணை மீட்பதற்கு எம்மிடத்தில் தெண்பில்லையே என்பதனை எழுதிவிடவா!
குணபாலசிங்கம் அண்ணர் எடுக்கும் முயற்சிகளால் வெல்ல முடியலையே என்கின்ற ஆதங்கத்தின் கவலைகளை எழுதிவிடவா!
எங்கள் துயரங்களை ஏட்டினில் பதிவுசெய்து ஏங்குவதை எழுதிவிடவா!
எங்களது மயிலைமண் எனிக்கிடைக்கும் என்றஎண்ணம் மனதைவிட்டு போனதென்ற உண்மையினை எழுதிவிடவா!
மயிலை துரை