அழகான மயிலிட்டி கிராமம்
அங்கு கம்பீரமாய் கடலில்
அசைந்தாடும் தோணிகளின் தோற்றம்
காலை நேரத்தில் அங்கு
காணும் இடம் எல்லாம்
நடமாடும் மனிதர்கள் கூட்டம்
எறும்புகள் போல் வாழ்வில்
சுற்றுவோம் சுழலுவோம் இது
அன்றாடம் நிகழ்கின்ற நிகழ்வு
கரையோரம் குடியிருக்கும் வீடு
காற்றையும் கடவுளையும் நம்பி
ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்வோம்
அங்கு கம்பீரமாய் கடலில்
அசைந்தாடும் தோணிகளின் தோற்றம்
காலை நேரத்தில் அங்கு
காணும் இடம் எல்லாம்
நடமாடும் மனிதர்கள் கூட்டம்
எறும்புகள் போல் வாழ்வில்
சுற்றுவோம் சுழலுவோம் இது
அன்றாடம் நிகழ்கின்ற நிகழ்வு
கரையோரம் குடியிருக்கும் வீடு
காற்றையும் கடவுளையும் நம்பி
ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்வோம்
நண்பகலில் புறப்பட்டு போவோம் மறுநாள் காலைதான் திரும்பியே வருவோம் இதுதான் எங்களது வாழ்க்கை உத்தர வாதமில்லா பயணம் உயிருக்கு பயந்ததொரு வாழ்க்கை ஊணுறக்கம் இல்லாத வேலை கடலிலே கடற்படை தொல்லை---அந்த துயருக்கு கிடையாது எல்லை---நாம் இதற்காக சலிப்பதும் இல்லை பெரிய நாட்டு தேவனென்றும்---மற்றும் வீர மாணிக்க தேவன்வாழ்ந்த துறைமுகம் என்பதை வரைபடம்காட்டும் மீன்பிடிக்கும் தொழிலே பிரதானம் அதுபோல் விவசாயம் செய்பவருமுண்டு சிறு வியாபாரம் பார்ப்பவருமிருந்தார் பண்பாடு கலாச்சாரம் கெடாமல் பலதர சாதியின மக்கள் ஒற்றுமையாய் வாழ்ந்த எங்கள் கிராமம் அவரவர் தொழில்களை அவர்கள் திறம்பட பணிகள் செய்து செல்வ செழிப்புடன் வாழ்ந்தோம் இந்து கிறீஸ்த்து என்று இரண்டு மதங்கள் இருந்தும் மதங்களால் வந்ததில்லை பிணக்கு ஏட்டறிவு அதிகம் இல்லை---ஆனால் எம்மதமும் சம்மதம் என்று வாழ்ந்தோம் கிராமத்தில் நாங்கள் அறுபத்தி நான்காம் ஆண்டு மார்கழி மாதத்தில் ஒருநாள் சோகத்தில் ஆழ்த்தியது காற்று கங்கை தன்பசி போக்க ஐம்பத்தி மூன்று நபரை களப்பலி எடுத்து ஆறியது சோகத்தை விட்டு நீங்கி மீண்டும் சுறுசுறுப் படைந்து பயணத்தை மீண்டும் தொடர்ந்தோம் அருகினில் விமான நிலையம் பக்கத்தில் கப்பல் துறைமுகம் சிமெண்ட் செய்யும் ஆலை பலதர வசதிகள் பெற்று சீரும் சிறப்புமாய் வாழ்ந்த கிராமம் இன்றைக்கு இல்லை இராணுவம் முற்றுகை இட்டு கிராமத்தை கைபற்றி கொண்டதால் எங்கள் வீடுகளை நாமிழந்தோம் சீரழிந்து போனதொரு வாழ்க்கை சிதறிய சொந்த பந்தம் கைகழுவி போனஎம் கலாச்சாரம் அநியாயமாய் கொடுத்த பலஉயிர்கள் விலாசத்தை தொலைத்த மக்கள்----இவை நெஞ்சினில் ஆறாத வடுக்கள் நாட்டையும் வீட்டையும் இழந்து நாடோடிகள் போல் அலைந்து நிம்மதி அற்று வாழ்கிறோம்----இன்று பலபேர் வசதியுடன் வாழ்கின்றார் பணத்தோடு கட்டி புரள்கின்றர்---ஆனால் பந்தமும் பாசமும் நெஞ்சிலில்லை----இவைகளை நினைத்து நினைத்து பார்க்கையிலே---என் நெஞ்சத்தில் தோன்றிய துயரத்தின் அலைகளாய் எழுந்த வடிவமிது மயிலை துரை | |