பேய்கள் வருகின்றன ஊருக்குள்
*** *** *** *** *** ***
அந்தி சாயும் வேளை காற்றில்வந்த செய்தி கேட்டு
முதலில் முற்றத்து பலா ஒப்பாரி வைத்தது.
கிணற்று துலாக்கொடி துவண்டு போனது.
வாசல் கதவு வாய்பிளந்து நின்றது.
முற்றத்தில் முருங்கை மூர்ச்சை ஆனது.
வேலியில் பூவரசு பேச்சிழந்து போனது.
அத்தி மரமும் அழுதது ,
அனாதையாய் போனதாய்.
தோட்டத்தில் வாழை வாயடைத்து நின்றது.

எருது பசுவை பார்த்து சொன்னது எமகண்டம் ஸ்ராட்.
ஏழுமலை கதிரமலை காதில போட்டார் ஏழரை ஆரம்பம்.
மிளகாய் செடி கத்தரிக்கண்டுக்கு சொன்னது பேய்கள் வருகின்றன ஊருக்குள்!!!
ஆறு வயதில ஆர்எம்மை பார்ப்பார் வீதியில,
அரை நிர்வாணமாய் பையன்கள்,
மேலாடை இன்றி மெதுவாய் நடந்தனர் வீதியில்.
அவசர கோலத்தில வெளிப்பாடு.
அலங்காரமின்றி மங்கையர் வீதிஉலா.
ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை.
என் மனதில் முணுமணுப்பு.
அயன்பண்ணி சேலை கட்டும் அக்கயர்,
அலங்கோல வெளிப்பாடு.
பூவைத்து பொட்டிட்ட கரங்கள்,
பெட்டியுடன் புறப்பட்டன.
குந்தியிருந்து பந்தி பரிமாறிய எங்கள் குல குமரிகள்,
கும்பிட்டபடி குடி பெயர்ந்தனர்.
எங்கள் வீட்டு நாயும் எம்முடன் வந்தது.
எதிர் வீட்டு நாயும் எழுந்து நடந்தது எம்முடன்.
கஞ்சனும் வந்தான்.
கர்ணனும் வந்தான்.
கடைசியில் போகுமிடம் தெரியாமல்.
ஓணாப்பிட்டிக்குள் ஒன்று கூடினர் எம்மவர்.
எதிரி ஏவிய எறிகணை ஒன்று,
குறி தவறாது பதம் பார்தது புளியமரத்தை.
ஒப்பாரி வைத்தனர் ஓணாப்பிட்டியார்.
புளியில விழுந்தது குடிமனை புகுந்திருந்தால்
புதைகுழி போயிருப்போம் நாமெல்லாம்.
எங்கள் பரம்பரையில் பலர்காணாது போயிருப்பர்.
மயிலிட்டி மக்கள் தொகை குறைந்துதான் போயிருக்கும்.
அல்லா தான் காத்தது எங்களை
சொல்லியிருப்பர் எம்மவர் முஸ்லீம் என்றால்.
கர்த்தர் காத்தார் கழுத்தை
என்றிருப்பர் கிறிஸ்தவர்.
எம்மவர் கூறிறார் "புளியடி வைரவர்" தான் காத்தார்.
அவர்கள் இந்துக்கள் ஆனதால்.
நாம் பால்குடித்த முலைக்காம்புகளும்
எம்முடன் வந்தனர்.
பாவம்! சிறுமியர் பாவாடை கட்டித்திரிந்த தாவாரம் மட்டும்
தனியாய் அங்கேயே நின்றது.
எங்கள் சிற்பாலயத்தில் நின்ற கோயில் வாகனங்கள்
கோமா நிலைக்கு போயின.
எங்கள் நாற்சார வீடும்
நாதியற்றுப்போனது.
நாம் படித்த பள்ளியும்
பாழடைந்து போனது.
எங்கள் வீட்டு அண்டா குண்டாவும்
அப்புகாமி வீடு போய் சேர்ந்தது.
எங்கள் வீட்டு அலுமாரியும் ,
ஆலய விக்கிரகங்களும்
அப்புகாமி பெற்ற பிள்ளை
அபகரித்துச் சென்றான்.
சாந்தி அக்கா வீட்டு சட்டி பானையும்
சந்திரசிறீ வீட்டு சமையலறையில்
சரண்டரானது சாந்தமாய்.
அப்பு ஆச்சி ஆண்ட மண்
அப்புகாமி அடிமை ஆனது.
மயிலிட்டி கடலும் மாற்றானிடம் .
ஆலயங்களும் அனாதரவானது.
"ஆண்டவன் அமைதி ஆனான்"
வீதிகள் வெறிச்சோடிப்போயின.
எங்கள் ஊர் குஞ்சிபண்டா குடியிருப்பு ஆனது.....
சுதா நவம்