எமக்கு உயிர் தந்த ஓர் உறவு!
எமக்காகவே வாழ்ந்த ஓர் உறவு!
எம் இன்ப துன்பங்களை பகிர்ந்த உறவு!
சமூகத்தில் அவர் பெயர் "தந்தை"!
தன் மார்மேலும் தோள்மேலும் போட்டு
வளர்த்த உறவு!
தந்தையாய், நல்லாசானாய், தெய்வமாய்
சகலமும் ஆகி நின்ற உறவு!
எமக்காகவே வாழ்ந்த ஓர் உறவு!
எம் இன்ப துன்பங்களை பகிர்ந்த உறவு!
சமூகத்தில் அவர் பெயர் "தந்தை"!
தன் மார்மேலும் தோள்மேலும் போட்டு
வளர்த்த உறவு!
தந்தையாய், நல்லாசானாய், தெய்வமாய்
சகலமும் ஆகி நின்ற உறவு!
இரத்தத்தை வியர்வையாக்கி எமக்காக உழைத்திடுவார்.
எம் கண்ணில் நீர் வழிந்தால்
அவர் நெஞ்சில் உதிரம் வழிந்திடும்.
மழலை குரல் கேட்டு மகிழ்ச்சியில் திழைத்திடுவார்!
பிஞ்சுப் பாதம் மண்ணில் பட்டு
நாம் நடக்க நடை பழக்கிடுவார்.
பிள்ளை பள்ளி செல்லும் அழகைப் பார்த்து
அகம் மகிழ்ந்திடுவார்.
கல்வியில் தேர்ச்சி பெற
கடுமையாய் உழைத்திடுவார்.
கலைகள் பல கற்றிட உதவிடுவார்.
தந்தையாய், தோழனாய் பழகிடுவார்.
தரணியிலே பிள்ளை வென்றிட
தன்நம்பிக்கையுடன் உழைத்திடுவார்!
நோயுற்றபோது துடித்திடுவார்
பிள்ளை வளர்ச்சி கண்டு பூரித்திடுவார்.
உயர் கல்வி கற்றிட ஒழுங்கமைத்திடுவார்.
உழைப்பால் உயர்ந்திட உறுதுணையாய் இருந்திடுவார்!
பிள்ளை பருவ வயது அடைந்ததும்
மணம் செய்து வைக்கத் துடித்திடுவார்.
பெண் பிள்ளை பிரிவு கண்டு நெகிழ்ந்திடுவார்.
தான் பெற்ற செல்வம் பிரிவதைக்கண்டு
நொருங்கிப் போய்விடுவார்!
முதுமை வந்தபோதும் கலங்கிடார்
விழுதுகள் தாங்கிடும் என்று நம்பிடுவார்.
வருடத்தில் ஓர் நாள் தந்தையர் தினமாம்
எனக்கு அதில் உடன்பாடில்லை,
நமக்கு வருடம் முழுவதும் தந்தையர் தினமே!
தந்தையைப் பற்றி எழுத தாள் போதுமா?
பேனா மைதான் போதுமா?
எழுத எழுத வற்றாத ஜீவநதியாக வந்திடுமே வார்த்தை!
என்னைத் சிருஷ்டித்த பிரம்மாவுக்கு
தலை சாய்த்து வணங்குகின்றேன்!
"சோதனை வந்தபோதும் சோர்ந்திடார்
எம் சாதனை கண்டு மகிழ்ந்திடுவார்"
"தடை பல கடந்து வந்தாய்
சாதனை பல படைத்து நின்றாய்
இடர் பல சூழ்ந்தபோதும்
இடையறாது உழைத்து நின்றாய்"
தமிழ் பேசும் தந்தையர் அனைவருக்கும்
தந்தையர் தின வாழ்த்துக்கள்
தொடர்க உம் பணி தொல்லைகள் அகலட்டும்
வாழ்க உம் பணி, வளரட்டும் உம் பணி,
ஓங்குக உம் பணி, உயரட்டும் உம் பணி!
சுதா நவம்
எம் கண்ணில் நீர் வழிந்தால்
அவர் நெஞ்சில் உதிரம் வழிந்திடும்.
மழலை குரல் கேட்டு மகிழ்ச்சியில் திழைத்திடுவார்!
பிஞ்சுப் பாதம் மண்ணில் பட்டு
நாம் நடக்க நடை பழக்கிடுவார்.
பிள்ளை பள்ளி செல்லும் அழகைப் பார்த்து
அகம் மகிழ்ந்திடுவார்.
கல்வியில் தேர்ச்சி பெற
கடுமையாய் உழைத்திடுவார்.
கலைகள் பல கற்றிட உதவிடுவார்.
தந்தையாய், தோழனாய் பழகிடுவார்.
தரணியிலே பிள்ளை வென்றிட
தன்நம்பிக்கையுடன் உழைத்திடுவார்!
நோயுற்றபோது துடித்திடுவார்
பிள்ளை வளர்ச்சி கண்டு பூரித்திடுவார்.
உயர் கல்வி கற்றிட ஒழுங்கமைத்திடுவார்.
உழைப்பால் உயர்ந்திட உறுதுணையாய் இருந்திடுவார்!
பிள்ளை பருவ வயது அடைந்ததும்
மணம் செய்து வைக்கத் துடித்திடுவார்.
பெண் பிள்ளை பிரிவு கண்டு நெகிழ்ந்திடுவார்.
தான் பெற்ற செல்வம் பிரிவதைக்கண்டு
நொருங்கிப் போய்விடுவார்!
முதுமை வந்தபோதும் கலங்கிடார்
விழுதுகள் தாங்கிடும் என்று நம்பிடுவார்.
வருடத்தில் ஓர் நாள் தந்தையர் தினமாம்
எனக்கு அதில் உடன்பாடில்லை,
நமக்கு வருடம் முழுவதும் தந்தையர் தினமே!
தந்தையைப் பற்றி எழுத தாள் போதுமா?
பேனா மைதான் போதுமா?
எழுத எழுத வற்றாத ஜீவநதியாக வந்திடுமே வார்த்தை!
என்னைத் சிருஷ்டித்த பிரம்மாவுக்கு
தலை சாய்த்து வணங்குகின்றேன்!
"சோதனை வந்தபோதும் சோர்ந்திடார்
எம் சாதனை கண்டு மகிழ்ந்திடுவார்"
"தடை பல கடந்து வந்தாய்
சாதனை பல படைத்து நின்றாய்
இடர் பல சூழ்ந்தபோதும்
இடையறாது உழைத்து நின்றாய்"
தமிழ் பேசும் தந்தையர் அனைவருக்கும்
தந்தையர் தின வாழ்த்துக்கள்
தொடர்க உம் பணி தொல்லைகள் அகலட்டும்
வாழ்க உம் பணி, வளரட்டும் உம் பணி,
ஓங்குக உம் பணி, உயரட்டும் உம் பணி!
சுதா நவம்