
அறியாதவயது
அந்திசாயும் நேரம்
ஆளாரவாரமற்ற
அடர்ந்த காடு
பாலைப்பழம் பொறுக்கி
பனம்பழம் பிதுக்கி
உண்டு மகிழ்ந்தபின்
வந்தடைந்தோம்
ஆழமறியா ஆற்றருகில்
அந்திசாயும் நேரம்
ஆளாரவாரமற்ற
அடர்ந்த காடு
பாலைப்பழம் பொறுக்கி
பனம்பழம் பிதுக்கி
உண்டு மகிழ்ந்தபின்
வந்தடைந்தோம்
ஆழமறியா ஆற்றருகில்
முதலை இருக்குதாம்
நிறையபேர் காணமல் போனவயாம்
என்றெலாம் கேள்வியுற்ற ஆறு
நீச்சல் அறியாத நான்
நீச்சலே அறியாத நண்பன்
மெல்ல நான் இறங்குகையில்
வேண்டாமென்றான்
தோள் பிடித்தான்
மெதுவாய் நழுவி
முன்னகர்கையில்
இறுகக் கை பிடித்தான்
கையுதறி பாய்ந்தேனுள்ளே
நிமிடமொன்று
மூச்சை பிடித்து
ஆழ்ந்திருந்தபின்
ஒளிந்திருந்தபின்
நிலத்தை உதைத்து
நீரை கிழித்து
வந்தேன் வெழியே
அதிர்ந்துபோனேன்
கரை நின்ற தோழனும்
என்னைபோலவே தெப்பமாய்
நனைந்து போயிருந்தான்
நான் தண்ணீரில்
அவன் கண்ணீரில்.
மயிலை ஐங்கரன்
நிறையபேர் காணமல் போனவயாம்
என்றெலாம் கேள்வியுற்ற ஆறு
நீச்சல் அறியாத நான்
நீச்சலே அறியாத நண்பன்
மெல்ல நான் இறங்குகையில்
வேண்டாமென்றான்
தோள் பிடித்தான்
மெதுவாய் நழுவி
முன்னகர்கையில்
இறுகக் கை பிடித்தான்
கையுதறி பாய்ந்தேனுள்ளே
நிமிடமொன்று
மூச்சை பிடித்து
ஆழ்ந்திருந்தபின்
ஒளிந்திருந்தபின்
நிலத்தை உதைத்து
நீரை கிழித்து
வந்தேன் வெழியே
அதிர்ந்துபோனேன்
கரை நின்ற தோழனும்
என்னைபோலவே தெப்பமாய்
நனைந்து போயிருந்தான்
நான் தண்ணீரில்
அவன் கண்ணீரில்.
மயிலை ஐங்கரன்
இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.