முதுகுசொறியுமொரு
ஏளனச் சிரிப்பு
அமைதியை கிழித்தெறிந்து
பாய்ந்து வருமொரு
துர்வார்த்தை
தாழ்ந்திருப்பவர்களிடம்
காட்டப்படும்
சிறு வேற்றுமை
அன்பானவர்களால்
தெளித்து விடப்படுமொரு
அமிலப்பார்வை
மனித மனங்களை
உடைப்பதற்கு
பெரிதாக ஏதும் முயற்சிக்க
வேண்டியதில்லை
இவைகளே
போதுமாயிருக்கின்றது.
ஏளனச் சிரிப்பு
அமைதியை கிழித்தெறிந்து
பாய்ந்து வருமொரு
துர்வார்த்தை
தாழ்ந்திருப்பவர்களிடம்
காட்டப்படும்
சிறு வேற்றுமை
அன்பானவர்களால்
தெளித்து விடப்படுமொரு
அமிலப்பார்வை
மனித மனங்களை
உடைப்பதற்கு
பெரிதாக ஏதும் முயற்சிக்க
வேண்டியதில்லை
இவைகளே
போதுமாயிருக்கின்றது.
துன்பத்தில்
உழல்வோரிடத்தில்
பேசப்படுமொரு
குளிர்மையான வார்த்தை
திக்கற்று நிற்கதியாய்
நிற்பவர்களுக்கு
வழிகாட்டுமொரு விரல்
ஆதரவு தேடி
வருபவர்களை
நோக்கி மலரும் மெல்லிய
புன்னகை
மனித மனங்களை
மகிழ்விக்க
பெரிதாக ஏதும் முயற்சிக்க
வேண்டியதில்லை
இவைகளே
போதுமாயிருக்கின்றது.
மயிலை ஐங்கரன்
உழல்வோரிடத்தில்
பேசப்படுமொரு
குளிர்மையான வார்த்தை
திக்கற்று நிற்கதியாய்
நிற்பவர்களுக்கு
வழிகாட்டுமொரு விரல்
ஆதரவு தேடி
வருபவர்களை
நோக்கி மலரும் மெல்லிய
புன்னகை
மனித மனங்களை
மகிழ்விக்க
பெரிதாக ஏதும் முயற்சிக்க
வேண்டியதில்லை
இவைகளே
போதுமாயிருக்கின்றது.
மயிலை ஐங்கரன்
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.