இலங்கையில் எத்தனையோ இடங்களில் புனித அந்தோனியார் ஆலயங்கள் இருப்பினும்,கொழும்பு,கொச்சிக்கடை ஆலயம் ஒருதனிச் சிறப்பும் கவர்ச்சியும் கொண்டதாக விளங்குகின்றது. மனித சமுதாயத்திற்கு இன,மத வேறுபாடின்றி இறைவனின் அருளைப் பெற்றுத்தரும் மத்திய நிலையமாக கொழும்பின் நடுநாயகமாக அமைந்துள்ளது. இவ்வாலயம் செவ்வாய்க்கிழமை தோறும் அணியணியாக வந்து சேரும் கூட்டங்களில் பல தரப்பட்டோர் உளர். குடும்பநலம், உடல்நலம், மனநலம், ஆத்மநலம் ஆகியபல்வேறு நன்மைகள் தேடி ஓடிவரும் அடியாரை புனித அந்தோனியார் எப்போதும் வெறும்கையோடு
அனுப்புவதில்லை.
இவ்விடத்தின் சிறப்பு ஒரு சுவையான வரலாறு. இறைவனின் புகழ் பாடும் ஒரு அழகிய கதை.

கொழும்பு மறைமாவட்டத்தின் சாசனங்களும், ஏடுகளும் இக் கோவிலின் வரலாற்றை அறிய நமக்கு துணைபுரிகின்றன. பதினெட்டாம் நூற்றான்டில் இலங்கை ஒல்லாந்து தேசத்தவரால் ஆளப்பட்டது. அக்காலத்தில் கத்தோலிக்க மதம்தடைசெய்யப்பட்டிருந்தது. கத்தோலிக்க குருமாரது தலைகளை கண்ட இடத்தில் கொய்துவர சிப்பாய்களுக்கு அரசு உத்தரவிட்டிருந்தது. குருமார் வெளிப்படையாக திருத்தொண்டாற்ற இயலாத நிலை.கத்தோலிக்க மக்கள் பாடோ மிகவும் அவலநிலை, பிறப்பு, திருமணம், இறப்பு போன்றவற்றிற்குக்கூட குருமார் இன்றி அவதியுற்றனர். மேலும் தொழில்,வரி அரசகருமங்கள் முதலியவற்றிலும் கடும் பறக்கணிப்பும். துன்புறுத்தலும் அதிகம். மதமாற்றம் பலவந்தமாக நடைமுறையிருந்தும்கூடதம் விசுவாதத்தை இவர்கள் கைவிட்டிலர். நூற்றம்பது ஆண்டுகாலமாக இறைவனால் சோதிக்கப்பட்டு, புடம் போட்ட தங்கம் போல் வெளிவரவிருந்தது நம் மறை.
இக்காலத்தில்தான் வண.யோசேப்வாஸ் அடிகளாரும், வண யாக்கோமே கொன்சாலவெஸ் அடிகளாரும் தம்முயிரை துச்சமென மதித்து ஈழத்தில் திருத்தொண்டாற்ற முற்பட்டனர். இவர்கள் ஆங்காங்கே புனருத்தாரணம் செய்வித்த கத்தோலிக்க சழூகங்களில் முக்கியமாய் விளங்கிய கொழும்பிற்கு நிலைவான குரவர் என்ற முறையில் தொண்டாற்ற அன்டோனியோ என்ற குரவரை இரகசியமாக வரவழைத்தனர். அன்டோனியோ அடிகளார் அன்றைய மலிபன் வீதியில், ஒரு வியாபாரி வேடம் பூண்டு வந்து தங்கினார்.எப்படியோ இதனை அறிந்த ஓல்லாந்தர் இவரை கைது செய்ய விரைந்தனர்.
அடிகளார் ஒருவாறு ஓடி,ஒளிந்து இன்றைய கொச்சிக்கடை பகுதிக்கு வந்தார்.அக்காலத்தில் அது ஒரு சிறு மீனவர் கிராமம்.அக்கிராமத்தோருக்கும் குரவருக்கும் ஏற்பட்ட ஈடுபாடு ஒல்லாந்த சிப்பாய்களைச் சற்று பணிய வைத்தது.
ஆண்டாண்டு காலமாக அக்கிராமவாசிகள் கடல் அரிப்பினால் தங்கள் நிலத்தை இழந்து வந்தார்கள்.வண.அன்டோனியோ அடிகளார் தம் செபவல்லைமையால் கடலரிப்பைக் கட்டுப்படுத்த முடிந்தால் எப்படியாவது அவரைக் காப்பாற்றுவது என்றும் உறுதி கொண்டார்கள்.அதுவரை அவருக்கு தீங்கு இழைக்கலாகாது எனவும் ஒல்லாந்தரிடம் உறுதியுடன் கூறினார்கள்.
அன்டோனியோ தம் இல்லம் சென்று குருவானவர்கான உடைகளை அணிந்து கொண்டு கொச்சிக்கடை திரும்பினார்.ஒரு பெரிய மரச்சிலுவையை கையில் ஏந்திக்கொண்டு கடற்கரையடைந்தார்.இறைவனின் மகிமை வெளிப்பட வேண்டுமென்றும் மிக உருக்கமாக மன்றாடினார்.கடலரிப்பு உச்ச நிலையிலிருந்த இடத்தில் அச்சிலுவையை நிறுவினார்.
அன்பே உருவான ஆண்டவர்.தம் அடியானின் இன்னல் தீர்க்க சித்தம் கொண்டார்.ழூன்றாம் நாள் சமூத்திரம் பின் வாங்கியது.யாவரும் காணக்கூடிய நிலையில் மணல்மேடு உருவாகியது. ஒல்லாந்தர் பின்வாங்கினர்.உம் விருப்பம்போல் திருத்தொண்டாற்றும் என குரவரை கேட்டுக்கொண்டனர்.
பனித அந்தோனியார் பெயரால் சிறுகுடிசையில் ஒரு ஆலயம் அங்கு உருவாயிற்று.அன்டோனியோ அடிகளார் தம் கடைசிக்காலம்வரை அங்கிருந்து இறைவனின் மகிமையைப் பறைசாற்றி மரித்தார்.அவர் தேகம் அங்கேயே அடக்கம் பண்ணப்பட்டது.
இன்று நாம் காணும்.புனித அந்தோனியரின் சிறிய பீடம்தான் கடலரிப்பு அற்புதத்தின்போது மரச்சிலுவை நாட்டப்பட்ட இடம்.1806-ம் ஆண்டு ஆலயம் விரிவாக்கப்பட்டதன் பின்னர் 1822-ம் ஆண்டு கோவாவிலிருந்து கொண்டு வரப்பெற்று வைக்கப்பட்டதுதான் இப்பீடத்திலுள்ள சிறிய சுரூவம்.
புனித அந்தேனியார் திருநாக்கு பதுவைபுரியில் பேணப்பட்டு வந்ததை நாம் அறிவோம்.அதிலிருந்து கொண்டுவரப்பட்ட சிறிய பகுதியினை நாம் சிறிய பேழையில் காணக்கூடியதாக இக் கோவிலில் வைத்துள்ளனர்.
திருச்சுரூவம் கொண்டுவந்த சில ஆண்டுகளில் தேவாலயம் பெருப்பிக்ல வேண்டிய அவசியம் ஏற்படலாயிற்று.1828ம் ஆண்டு தொடங்கிய இத்திருப்பணி 1834ம் ஆண்டு நிறைவுற்றது. பல்வேறு சமயத்தோரும்,அரசினர் இராணுவத்தோரும்,சழூகத்தின் பல்வேறு மட்டங்களில் உள்ள விசுவாசிகளினதும் நன் முயற்சியால் மீண்டுமொருமுறை 1940ம் ஆண்டிலிருந்து இன்றைய உருக்கொண்ட ஆலயம் நாளெரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக எழில் தோற்றங் கொண்டு பொலிவு கூடி வருகின்றது.ஆண்டவரின் மகிமை இவ்வாறு வெளிப்படுத்தப்பட்டதைக் காண நாம் உண்மையில் பாக்கியசாலிகள்.
பக்கத்துப் பீடத்தில் இருக்கும் அர்ச் அந்தோனியாரின் அற்புத சொரூபம் குண்டு பாய முடியாத கண்ணாடிப் பேழையில் பத்திரமாக வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.