மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013, 12, 11
  • ஆலயங்கள்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அஞ்சலி வசீகரன்
    • மகிபாலன் மதீஸ்
    • மயிலையூர் தனு
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • Image Gautham
    • தயாநிதி தம்பையா
    • மயிலை துரை
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சுதா நவம் படைப்புக்கள்
    • வசந்த் சகாதேவன் படைப்புக்கள்
    • ஜெயராணி படைப்புக்கள் >
      • தொலைந்த ஏக்கங்கள்
      • வாழ்வின் பயம்
      • நானும் என் தேவதையும்
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • "உலக மங்கையர் தினம்!"
      • சிந்தனை வரிகள் Dr. Jerman
    • அன்ரன் றாஜ் படைப்புக்கள்
    • சாந்தன் படைப்புக்கள் >
      • "சாந்தன் படைப்புக்கள்"
      • "சிந்தனை வரிகள் நமக்கு"
      • "ரோஜா மலரே"
      • "பெண்"
      • "பணம்"
      • "ரிசானா"
      • "புத்தாண்டே வருக! 2013"
      • "சுனாமி"
      • "உறவுகள்"
      • "கடல் அன்னை"
      • "சிந்தனை உலகம்"
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக! 2012"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • அருண்குமார் படைப்புக்கள் >
      • இருண்டுபோன நாளின் நினைவுகள்!
      • "சமர்ப்பணம்"
      • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
      • "நினைவுகள் 2" "மடம்"
      • "நினைவுகள் 1" "மண்சோறு"
      • "நான் பிறந்த மண்ணே !"
    • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள் >
      • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள்
      • கிளாலி பயணம்
      • முறிகண்டி பிள்ளையார்
      • "காலங்கடந்த ஞானமிது"
      • "கோரத் தாண்டவம்"
      • "காலப் பெருவெளியில்"
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • "சிவராத்திரியும் கத்தோலிக்கமும்"
      • "முதல்பிரிவு"
      • "பாட்டன் வழி நிலம் வேண்டும்"
      • "வசந்தம்"
      • "உலக பெண்கள் தினம்!"
      • "தனித்திருப்பாய்!"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • ஜீவா உதயன் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • ஜீவா உதயன் படைப்புக்கள்
    • கௌதமன் படைப்புக்கள்
    • சங்கீதா தேன்கிளி படைப்புக்கள் >
      • சங்கீதா தேன்கிளி
      • "புலம்பெயர்ந்தோர் கவனத்திற்கு.."
      • "எங்கள் மயிலை மண்"
      • "பனங்கள்ளு"
      • "மின்னல்களால் இழைக்கப்பட்ட பூமி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
  • சிறப்புத் தினங்கள்
    • Womens day 2015
    • மகளிர் தினம் 2014 >
      • மகளிர் தினம் 2013 >
        • "பெண்"
        • "உலக மங்கையர் தினம்!"
        • "உலக பெண்கள் தினம்!"
      • மகளிர் தினம் 2012
    • NELSON MANDELA
    • தந்தையர் தினம்
    • அன்னையர் தினம் >
      • அன்னையர் தினம்
    • மே தினம்
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
      • தேவி குணபாலசிங்கம்
      • திரு. வரதராஜா
      • சாரா சதானந்தம்
    • பொங்கல்
    • பொங்கல்
    • HAPPY NEW YEAR >
      • New year
    • Christmas
  • மயிலிட்டி தளங்கள்:
    • நோர்வே >
      • நோர்வே மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • பிரித்தானியா >
      • MYLIDDY MAKKAL ONRIYAM UK
      • MYLIDDY SPORTS CLUB UK
    • அமெரிக்கா
    • கனடா >
      • கனடா மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • ourmyliddy.com
  • புகைப்படங்கள்
    • அருண்குமார்
  • பாடசாலைகள்
    • மயிலிட்டி இலவச முன்பள்ளி
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் >
      • பாடசாலை நிகழ்வுகள்
      • "ஜெயராணி நிர்மலதாசன்"
      • பிரகாசிக்கட்டும் வாழ்வு
      • ஒளி விழா 2012
  • ஒன்றுகூடல்
    • ஒன்றுகூடல் 2014
    • ஒன்றுகூடல் 2012
    • ஒன்றுகூடல் 2011
  • எம்மைப்பற்றி:
    • தொடர்புகளுக்கு:
  • மயிலை மண்ணில்
  • ஒளியும் ஒலியும்
    • ஒளியும் ஒலியும் >
      • "அண்ணை றைற்"
  • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி
    • உருக்குமணி தர்மலிங்கம்
  • ஆறாவது அகவை
    • ஐந்தாவது அகவை
    • நான்காவது அகவை
    • மூன்றாவது அகவை
    • இரண்டாவது அகவை
    • முதலாவது அகவை >
      • DR. JERMAN MYLIDDY
      • KOWSIKAN KARUNANITHI
      • SATHANANTHAN SADACHARALINGAM
      • SANGEETHA THENKILI
      • SELVIE MANO
      • JUSTIN THEVATHASAN
      • KUMARESWARAN TAMILAN
      • ANTON GNAPRAGASHAM
      • SHAN GAJA
      • ALVIT VINCENT
      • NAVARATNARANI CHIVALINGAM
  • தந்தை தேவராஜன்
  • சாதனை
  • .

புனித அந்தோனியாரும் துர்க்கை அம்மனும்

19/5/2013

8 Comments

 
Picture
புனித அந்தோனியாரும் துர்க்கை அம்மனும்

நான் எனது ஊர் மயிலிட்டியிலிருக்கும் போது ஒவ்வொரு செவ்வாயும் ஊறணி புனித அந்தோனியாரிடம் செல்வது வழக்கம். காரணம் ஆண்குழந்தை வேண்டும்  என்று ஊறணி அந்தோனியாரிடம் என் பெற்றோர் வேண்டி  நான் பிறந்ததினால் எனக்கு அவரின் பெயர் இணைக்கப்பட்டது. 

Picture
இதேபோல் ஓர் செவ்வாய்கிழமை, மயிலிட்டி காணிக்கைமாதா கோவிலுக்கு பக்கத்திலிருந்த மணல் ஒன்றியத்திலிருந்து நாம் சிலர் அந்தோனியாரிடம் எனது காரில் புறப்பட்டோம். அந்த நேரத்தில் எரிபொருள் தட்டுப்பாடான காலம். வாகனத்திற்கான எரிபொருளை வீட்டு வாசலில் போத்தலில் விற்பனை செய்த காலம் நான் வாங்கிய எரிபொருளில் கலப்படம் செய்து இருந்ததால், கார் சீராக ஓடமுடியாது இருந்தது. அந்தோனியாரிடம் சென்றுவிட்டு துரைசிங்கம் அண்ணாவிடம் கொண்டே காட்டுவம் என்று எண்ணிக் கொண்டு வந்தேன். கோயில் அருகில் வரும் போது திடீர் மாற்றம், முதலில் திருத்தி விட்டு பின் கோவிலுக்கு செல்வோம். இதை நான் தீர்மானிக்கவில்லை அந்தோனியார்தான் திசை திருப்பினார் என்று உணர்கின்றேன்.

காங்கேசன்துறையை நோக்கி செல்லும் போது 'மீசை'யின் பட்டடைக்கு (கராஜ்) பக்கத்தில் பல இளைஞர்கள் நின்றார்கள். எனது வண்டியை மறித்தார்கள். அவர்கள் அனைவரும் எம் ஊர் இளைஞர்கள். என்னைக் கண்டதும் றாஜ் இன்னார் சூட்டுக் காயத்துடன் இருக்கின்றார், உடனடியாக வையித்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றனர். 

எனது வயது 20 கூட இல்லை. இளம் கன்று பயம் அறியாது என்பது போல். எந்த மறுப்பும் சொல்லாது பின்னாலிருந்த எனது நன்பர்களை இறங்குமாறு பணித்து காயப்பட்டவரை திரு.மகேந்திரம் (நயிலோன்), திரு.சிவம்பு இருவரும் கொண்டுவந்து ஏற்றினார்கள். அவரின் கண்ணில் குண்டு அடிபட்டு  இரத்தம் கொட்டியபடி இருந்தது. வண்டி மிக வோகமாக புறப்பட்டது. காயப்பட்டவர்கள் வழக்கமாக ஐயோ, அம்மா, வலிக்குது என்றுதான் வழமையாக கத்துவார்கள். இவர் அதற்கு மாறாக வீரமாக ஆவேசமாக கத்தினர்தினார். அது எனக்கு சற்று ஆச்சரியம் தந்தது. காங்கேசன்துறைச் சந்தியால் திரும்பும் போது மிகவும் உரத்த குரலில் கத்தி தனது உடலை மேலே எழுப்பி அதன் பின் எந்த சத்தமும் இல்லை. எனக்கு சற்று பயமாயிருந்தது. மூச்சு நின்று விட்டதா என சந்தேகம் ஏற்படுத்தியது. அந்தோனியார் கை விடமாட்டார் என்ற நம்பிக்கையில் தெல்லிப்பளை வையித்தியசாலை நோக்கி செல்கின்றேன். கலப்பட எரிபொருள் அப்பப்ப என் வேகத்தை கட்டுப்படுத்தி தன் வேலையை காட்டி சீராக என் வேகத்தில் செல்லமுடியாது எரிச்சலை ஊட்டியது.

தெல்லிப்பளை சந்தி வந்துவிட்டது இனி வைத்தியசாலைதான் என்றால், வையித்தியசாலை தெருவிற்கு போகமுடியாதவாறு இருந்தது எனக்கு மிகவும் கடுப்பாகிவிட்டது. இனி யாழ்ப்பாணம் வைத்தியசாலைதான் என்றாலும் எனது காரின் எரிபொருளின் நிலை தாக்குப் பிடிக்குமா கேள்விக்குறியாகவே இருந்தது. 

Picture
சற்றும் தாமதியாது அந்தோனியார் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, என் மனதை கட்டுப்படுத்திக் கொண்டு குறை உயிரையும் கொடுப்பதா என்று பின் புறமாக என் வண்டியத் திருப்பி பீரிட்டு மீண்டும் யாழ் வையித்தியசாலையை நோக்கி புறப்பட்டேன். (அந்தோனியாரிடமிருந்து துர்க்கை அம்மன் பொறுப்பெடுத்துக் கொள்வார் என்று அப்போது எனக்குத் தெரியவில்லை.)

என் வண்டியின் வேத்தை என்னால் தீர்மானிக்க முடியவில்லை. அது தான்  அந்த கலப்பட எரிபொருள் என் வேகத்தை தடைசெய்தது. இதற்கு மேல் எனக்கு பொறுமையில்லை. ஏதாவது ஒரு வாகனத்தை உதவிக்கு கேட்போம் என தீர்மானித்தேன். பணம் கொடுத்தாலும் தம் உயிரை பணயம் வைக்க யார் தான் வருவார்கள். அப்படியிருந்தும் ஓர் 'மினிபஸ்' சேவையில் இல்லாது பின் புறம் வந்தது. கையை காட்டி உதவி கேட்டேன். அவர்கள் எம்மை சந்தியில் பார்த்தவர்கள். மிக வேகமாக நிறுத்தாது சென்றுவிட்டார்கள். இதை எழுதும் போது கூட என் கண்ணில் நீர் வடிவதை தவிக்கமுடியாது உள்ளது.

நான் தொடர்ந்தும் எனது பாதையில் சென்று கொண்டிருந்தேன். எதிரே வரும் ஏதாவது ஒரு வாகனத்தை எனது வண்டியை குறுக்கே விட்டு மறிப்பது என தீர்மானித்து கொண்டு செல்லும் போது துர்க்கை அம்மன் கோயில் நெருங்குகிறது. அது தான் செவ்வாய் கிழமைக்காரி அன்று செவ்வாய் கிழமை கை விட்டு விடுவாளா.

எதிரே ஓர் வெள்ளைக் கார் வருகிறது. 'கேம்பிறிச்' EN-7661 கார் குறுக்கே விட்டுமறித்தேன். அதன் பின் தான் தெரிந்தது காயப்பட்டவரின் சிறிய தந்தை என. அவர் அந்தநேரம் துர்க்கை அம்மனிடம் வந்தாரா அல்லது அம்மன் அழைத்து வந்தாவா என்பது இப்போதும் நினைக்கையில் அதிசயமாய்த்தான் இருக்கின்றது. அவர் அந்த நேரத்தில் நல்ல வசதி படைத்தவர். வண்டியின் உள்ளேயிருந்த சிவம்பு ஆவேசமாக திட்டினார். நான் இறங்கிச்சென்று பணிவாக நடந்ததை விளக்கினேன். அவர் மறுப்பேதுமின்றி தனது காரில் ஏத்துமாறு கூறினார். நான் மீண்டும் ஊரிற்கு திரும்பினேன் அவர்கள் யாழ் வையித்தியசாலைக்கு சென்றார்கள்.

காங்கேசன்துறை சந்திக்கு வரும்போது காயப்பட்டவரின் தாயார் காலில் செருப்பு கூட இல்லாது ஓடி வந்து இதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாது அந்த தாயின் தவிப்பை வார்த்தையால் வடிக்கமுடியாது. தனது மகனுக்கு என்ன நடந்ததோ என்ற மரண வேதனை. உடனே நான் எனது வண்டியை நிறுத்தி அவருக்கு நடந்ததை கூறி சமாதானம் செய்து அவரை அவரின் வீட்டில் கொண்டு விட்டுவிட்டு  எனது வீட்டிற்கு சென்று விட்டேன்.

அந்தேனியாரிடம் போகவில்லை என்ற வருத்தம் என் உள்ளிருந்தது.

பிற்பகல் ஆறு மணிக்கு சயிக்கிளில் ஊறணி அந்தோனியாரிடம் செல்கின்றேன் ஏற்றிச் சென்ற கார் திரும்பி வருதைக் கண்டேன். அவர் காரை நிறுத்தி தம்பி  உயிருக்கு பயம் இல்லை கண் ஒன்று தான் பிரச்சனை என்று தகவல் பரிமாறினார். பின் நான் அந்தேனியாருக்கு நன்றி கூறி விட்டு சில நாள்களின் பின் எனது பணி காரணமாக இந்தியாவிற்கு சென்று தங்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.

மறுபடி காயப்பட்டவரை பார்க முடியவில்லை. வெளிநாடு செல்வதற்காக கொழும்பில் வந்து நிற்கும் பொழுது ஓருநாள் எமது ஊர் நண்பர் பழனியுடன் 4ம் குறுக்குத்தெருவில் சந்திக்க நேர்ந்தது. பழனி என்னுடன் வந்து உரையாடினார். காயப்பட்டவர் சற்று விலகி தூரத்தில் நின்று பழனிக்காக காத்திருந்தார். என்னுடன் பேசவில்லை. எனக்கு மிக வேதனையைத் தந்தது.ஏன் இப்படி இவர் செய்கிறார் என விடை தெரியாத பல வினாக்கள் என்னுள். தற்போது அவர் பாரீஸில் வசிக்கின்றார். நான் பாரீஸ் சென்ற போது அவரின் சகோதரரை சென்று சந்தித்தேன். ஏனோ தெரியவில்லை அவரை பார்க்கத் தோன்றவில்லை.

பின் ஒரு நாள் அந்த நபர் சம்மந்தமாக எம் குடும்ப நண்பர் இராஐதுரை உதயன் உடன் பேசும்பொழுது, இச் சம்பவங்களை அவரிடம் சொன்னேன். மறுநாள் பாரீஸிலிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அது தான் அந்த காயப்பட்டவர். ஜயோ, றாஜ் மன்னித்து கொள்ளுங்கோ எனக்கு இது எதுவும் தெரியாது. என நீண்டநேரம் எமது உரையாடல் தொடர்ந்தது.

யார் இந்த காயப்பட்டவர் என நீங்கள் செல்லுங்கோ என கேட்பது எனக்கு கேட்கின்றது. பலருக்குத் தெரிந்திருக்கலாம். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் உங்கள் கருத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நானும் இவர் யார் என்பதை பின்பு உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். 

நன்றி: ஊறணி புனித அந்தோனியார்
நன்றி: தெல்லிப்பளை துர்க்கை அம்மன்

ஆக்கம்: ஞா. அன்ரன்
பதிவு: 19/05/2013

8 Comments
Justin thevathasan
19/5/2013 06:30:56 am

கடவுள்ளை நம்பினார் கைவிடமாட்டார் என்பதற்கு ராஜ் அண்ணாவின் இந்த கட்டுரை நல்ல உதாரணம் . கட்டுரைய வசித்த பொது புல்லரித்தது என் நண்பன்னை காப்பாற்றிய கடவுள்ளுக்கும் உதவி செய்த உங்கள்ளுக்கும் என்னுடைய நன்றி !

Reply
arunkumar link
19/5/2013 07:27:44 am

நன்றி ஜஸ்ரின் உங்கள் கருத்துக்களுக்கு!

Reply
ratnarajah link
19/5/2013 10:09:41 am

ராஜ் மிகவும் அருமையான பதிவு உண்மையை தெளிவாகப்பதிவு செய்தற்கு வாழ்த்துக்கள். எப்போது எமது பிழைகளை பகிரங்கமாக சொல்லத்துணிகிறோமோ அன்றுதான் எமது இலக்குகள் வெற்றியாக அமையும்.மேலும் இந்த சம்பவம் நடந்தபோது செவ்வாய்க்கிழமை அந்தோனியார் கோவிலில் நான் பூசை பார்த்துக்கொண்டிருந்தேன் ஏதோ வெடிச்சத்தம் கேட்டது எனக்கு விளங்கிவிட்டது யாருக்கோ எதோ நடந்துவிட்டது என்று சைக்கிளை எடுத்துக்கொண்டு போனேன், பொன்னையா கடைக்கு முன்பாக இருந்த சுத்து மதில் வளவினுள் ஒரு பற்றைக்குள் ஒரு கண்ணில் ரத்தம் வழிந்தபடி குழறியபடி என்னை சாகக்கொல்லு சாகக்கொல்லு என்று கத்தியபடி இருந்த இளம் வயதினனின் வேதனையின் உச்சத்தை அன்று நேரடியாக நான் கண்டேன். இது நான் கண்ட என்னைப்பாதித்த சம்பவம். பின்பு நான் அவரை பாரிசில் கண்டேன் ஆனால் இதைப்பற்றி கதைக்கவில்லை-இது அவரின் பழைய வேதனைகளை கிளறுவதாக இருந்தாலும், இதை என் நினைவாகப்பதிகிறேன்.

Reply
Arunkumar link
19/5/2013 05:06:01 pm

நன்றி நண்பர் ரட்ணாவுக்கு! உங்கள் கருத்தை அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள். நன்றி!

Reply
Anton Gnanapragasam link
19/5/2013 05:28:39 pm

நன்றி ரட்ணறாஜ்.சுயவிமர்சனம்,விமர்சனம் இணர்டும் தான் சரியான பாதையில் செல்ய முடியும் என உலகில் பல அறிஞர்கள் செல்லியுள்ளார்கள்.அது தான் நம்மில் இல்லையே.

Reply
Mano
19/5/2013 08:12:30 pm

உங்கள் மனிதநேயத்திற்கு தலை வணங்குகின்றேன். எதையும் பேசி பிரச்சனைகளை, மனதிலுள்ளதை தீர்ப்பதே மிகவும் நல்லது என்பதற்கு உங்களது தொலைபேசி உரையாடலே சாட்சி. :-)

Reply
kajan
20/5/2013 09:36:28 am

றாயு அண்ணனுடன் கடந்தகால கசப்பான அனுபவங்கள் பற்றி உரையாடிய போது இச்சம்பவத்தையும் எனக்கு கூறியிருந்தார்.அந்த வெடி பட்ட வேங்கை வெள்ளையர் நாட்டிலே வளமுடன் இன்று வாழ்கின்றது என்றால் அதற்கு அந்தோனியார்,துர்க்கை அம்பாளின் அருளும் மகிழூந்தில் வந்த மனிதர்களுமே காரணம்.

Reply
Kajan link
21/5/2013 01:58:14 am

சொந்தங்கள் தாய் தந்தது, இந்த பந்தங்கள் யார் தந்தது?

Reply



Leave a Reply.

    Picture

    என்னைப்பற்றி

    அன்ரன் றாஜ் ஞானப்பிரகாசம்
    மயிலிட்டி

    பதிவுகள்

    February 2015
    December 2014
    November 2014
    May 2014
    April 2014
    January 2014
    December 2013
    June 2013
    May 2013
    April 2013

    முழுப் பதிவுகள்

    All

நன்றி மீண்டும் வருக!

நன்றி மீண்டும் வருக!

நன்றி மீண்டும் வருக!
Hit Counter by Digits
© 2011-22 myliddy.fr