அறுபத்தி நான்கில் அலைகடல் ஓரத்தில் பெரும்துயர் நடந்து போனது அன்று ஐம்பது ஆண்டுகள் ஆகியும் இன்று அன்றைய நினைவினை இங்கிதம் பகிர்கின்றேன். மண்ணில்ப் பிறப்பு நாமெடுக்கும் முன்பே அள்ளுண்டு போநோர்க்கு அஞ்சலிகள் இன்று பொல்லாத புயல் சொல்லாமல் வந்து அந் நாளில் எம்மவர் உயிர் குடித்து சென்றதுவே. மயிலிட்டிக் கரையில் மரண ஓலம்...... மாதாவின் பிள்ளைகளோ வாழ்விழந்த கோலம்...... மாரியம்மன் பக்தர்களோ விதவைகளாய் நின்றகாலம்...... மார்கழி இருபத்தி மூன்று மறக்க முடியாத சோகம்..... பச்சிளம் பாலகர் படிப்பினைத் துறந்தனர் தத்தளித்த குடும்பங்களின் தலைவர்கள் ஆயினர் கட்டுமரம் ஏறி மீண்டும் கடல்மடி தவண்டனர் தொண்ணூறு (15.06.1990) வரை கடலில் செல்வம் குவித்தனர். விண்ணகம் சென்றவர் சாந்தி பெற மண்ணிலிருந்து யாகங்கள் செய்கின்றோம் விட்டுப் போனவரே விண்ணில் சாந்தி பெற.... விட்டுப் போனவரே விண்ணில் சாந்தி பெற.... அரை நூற்றாண்டு அமரர்களே அடைந்திடுவீர் சாந்தி ஆண்டவரின் பாதத்தில் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடுக! | |
1) மிக்கேல்பிள்ளை அந்தோனிப்பிள்ளை
2) கிறிஸ்து அந்தோனிமுத்து
3) அந்தோனிமுத்து வேதநாயகம்
4) செல்லத்துரை
5) பாக்கிநாதன்
6) கலித்தர் சந்தியாப்பிள்ளை
7) இரத்தினர் ஜெயராமன்
8) செல்லத்துரை
9) கணபதிப்பிள்ளை
10) கணபதிப்பிள்ளை துரை
11) சரவணணை கந்தசாமி
12) சரவணனை செல்வராஜர்
13) கந்தசாமி
14) ஐயாச்சாமி ஆனந்தவேல்
15) பெரியதம்பி
16) ஐயாத்துரை
17) தேவசகாயம் அருளப்பு
18) ஆ.மார்க்கண்டு
19) சவரிமுத்து
20) சி.அழகரட்ணம்
21) நல்லையா
22) வல்லிபுரம்
23) சாம்பசிவம்
24) சிவனெளி
25) பச்சடியார்
26) சுப்பையா
27) சின்னராசா
28) இராமசாமி
29) இராசகனி
30) இராசலிங்கம்
31) ஆனந்தராசா
32) கந்தையா மருகன் --------
33) முருகேசு (ஆனையிறவு)
34) விசுவலிங்கம் தம்பியய்யா
35) கந்தசாமி (சுறுக்கன்)
36) சின்னத்துரை குமாரசாமி (குமார்)
37) முத்தையா ஐயாத்துரை
38) சின்னத்துரை செல்லச்சாமி
39) மாணிக்கர் இராசையா
40) துரைராசா
41) செல்லக்கண்டு மகன்-------
42) சாபாபதி இலச்சுமிகாந்தன்
43) செல்வநாயகம் அந்தோனிப்பிள்ளை
44) இரத்தினம்
45) சின்னத்தம்பி அர்சுனன்
46) வாவாசிங்கம்
47) செல்லத்தம்பி சின்னத்துரை
48) கனகசபை
49) சண்முகம்
50) தங்கலிங்கம்
51) பராசிங்கம்.
53) சின்னர் திருச்செல்வம்
54) யோசேவ்
55) அமிர்தநாதர்
56) சின்னத்தம்பி
மேலேயுள்ள பெயர்கள் பல மயிலிட்டியில் அழைக்கப்பட்ட பெயர்களாகவுள்ளன இவர்களின் முழுப்பெயர்தெரிந்தவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு இதனை பூரணப்படுத்த உதவுமாறு வேண்டுகின்றேன்.அத்துடன் இந்தப் பெயர்பட்டியல்களில் இல்லாதவர்களின் விபரங்கள் தெரிந்தவர்கள் தயவு செய்து இதனைப் பூரணப்படுத்த உதவுமாறு வேண்டுகின்றேன்.
மயிலிட்டி மக்களின் ஒருவனாய்
அன்ரன் ஞானப்பிரகாசம் (றாஜ்)
தொலைபேசி :-0041 61 481 15 87
மின்னஞ்சல் :- [email protected]
skype ID ;- gnanapragasam35
இதில் தங்கள் ஆக்கபூர்வமான விமர்சனங்களையும்,கருத்தையும் எதிர்பார்த்துள்ளேன்.
நன்றி