ஒரு ஆண்டு ஆகினும்
ஒரு துளியும் நீ குறையவில்லை அம்மா..
உனது தெப்பக்குளத்தில்
நீருக்குப் பதிலாக
சவால்கள் நிறைந்திருந்தது.
நீந்திக் கடந்தாய் நீ..
உனது வழித்தடங்களில்
புற்களும் முட்களும் குவிந்திருந்தது
புன்னகையுடன்
தாண்டிக் கடந்தாய் நீ...
ஒரு துளியும் நீ குறையவில்லை அம்மா..
உனது தெப்பக்குளத்தில்
நீருக்குப் பதிலாக
சவால்கள் நிறைந்திருந்தது.
நீந்திக் கடந்தாய் நீ..
உனது வழித்தடங்களில்
புற்களும் முட்களும் குவிந்திருந்தது
புன்னகையுடன்
தாண்டிக் கடந்தாய் நீ...
உனக்கான கனிகள் எப்போதும்
எட்டாத உயரத்திலிருந்தது
இழுத்துப் பறித்து பகிரும்
தெம்பு இருந்தது உன்னில்...
ஆழ்கிணற்றின் அந்தியிலிருந்து
நீருஞ்சி
தாகம் தீர்க்கும் புத்தியிருந்தது உன்னில்..
நீ
பெற்றிராத சுதந்திரத்தை
எமக்களித்தாய்
நீ
பெற்றதைக் காட்டிலும்
பெரும் பாக்கியங்கள் பெற்றுத் தந்தாய்.
பெற்றவளாக நீ அமைய
நற்றவங்கள் செய்திருந்தேன்.
எம் கனவுகள் மெய்ப்பட
நீ கடுந்தவம் புரிந்தாய்
கண்ணுக்குள் மணியாய் எமைக்
காத்து மறைந்தாய்
அல்லி மலர்கள்
அள்ளி நிரப்பி
உன் பாதங்களை
ஆராதிக்கின்றோம் அம்மா...
கண்கள் குளமாகின்றன; ஆனாலும்
கலக்கமில்லை அம்மா
நீ அமைதது தந்த
எங்களுக்கான பாதையில்
எந்தக் கற்களும் முட்களும் இல்லை.
எட்டாத உயரத்திலிருந்தது
இழுத்துப் பறித்து பகிரும்
தெம்பு இருந்தது உன்னில்...
ஆழ்கிணற்றின் அந்தியிலிருந்து
நீருஞ்சி
தாகம் தீர்க்கும் புத்தியிருந்தது உன்னில்..
நீ
பெற்றிராத சுதந்திரத்தை
எமக்களித்தாய்
நீ
பெற்றதைக் காட்டிலும்
பெரும் பாக்கியங்கள் பெற்றுத் தந்தாய்.
பெற்றவளாக நீ அமைய
நற்றவங்கள் செய்திருந்தேன்.
எம் கனவுகள் மெய்ப்பட
நீ கடுந்தவம் புரிந்தாய்
கண்ணுக்குள் மணியாய் எமைக்
காத்து மறைந்தாய்
அல்லி மலர்கள்
அள்ளி நிரப்பி
உன் பாதங்களை
ஆராதிக்கின்றோம் அம்மா...
கண்கள் குளமாகின்றன; ஆனாலும்
கலக்கமில்லை அம்மா
நீ அமைதது தந்த
எங்களுக்கான பாதையில்
எந்தக் கற்களும் முட்களும் இல்லை.
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - அமரர் தேன்கிளி செல்வராணி (அம்மன்)
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.