தாய்மண்ணைத்தேடி...
மனிதம் மறந்து
மானிடம் மிருகமாய்
மாறிடும் காலம் எங்கே போகுதோ!
கடவுள் கொன்று
காமம் உண்டு
காவிஉடையில்
ஆன்மீகம்-ஒரு புறம்!
கள்ளப் பணத்தில்
வெள்ளை உடையில்
கொள்ளை அடிக்கும்
அரசியல்-ஒரு புறம்!
ஆடை குறைத்து
ஆபாசம் நிறைத்து
அசிங்கத்துடன்
கலை-ஒரு புறம்!
மனிதம் மறந்து
மானிடம் மிருகமாய்
மாறிடும் காலம் எங்கே போகுதோ!
கடவுள் கொன்று
காமம் உண்டு
காவிஉடையில்
ஆன்மீகம்-ஒரு புறம்!
கள்ளப் பணத்தில்
வெள்ளை உடையில்
கொள்ளை அடிக்கும்
அரசியல்-ஒரு புறம்!
ஆடை குறைத்து
ஆபாசம் நிறைத்து
அசிங்கத்துடன்
கலை-ஒரு புறம்!
விதைத்தவன் வீதியிலே
விலைபொருள் சந்தையில்
விதியிலா
விவசாயி-ஒரு புறம் !
இல்லறம் நடத்தும்
மானிடன் உழைப்பு
சுரன்டி எடுக்க
இடைத்தரகன் நடுவிலே !
அடையாளம் அழிந்து
அடைக்கலம் புகுந்து
அடிமைகளாய்
அகதிகள்-ஒரு புறம் !
சூதாட்டம் சுகமென
விளையாட்டாய் விதைதூவ
விளையாட்டாய்
விளையாட்டு-ஒரு புறம் !
வேலை வேண்டி
காசைக் கட்டி
கவலையுடன்
இளைஞன்-ஒரு புறம் !
கடமை உணர்வை
கருக்கி எடுத்து விட்டு
காக்கி சட்டைக்குள்
காவல்-ஒருபுறம்!
காசை நிறைக்க
காப்பகம் நிறைக்கும்
கருணையிலா
பிள்ளைகள்-ஒரு புறம்!
திட்டம் தீட்டி
சத்தம் இன்றி
களவாடும்
களவானி-ஒரு புறம்!
வட்டி உயர்த்தி
பெட்டி நிறைத்து
துண்டைப்போடும்
நிதிநிறுவனம்-ஒரு புறம்!
அடுத்த பெண்ணின்
அணிகலனை அட்டவணையிட
அழுக்கு மகளிர்
அழகிகள்-ஒரு புறம் !
முகநூல் சென்று
முகவரி இழந்து
முடங்கிடும்
முயல்கள்-ஒரு புறம் !
ஒரு புறம்
மட்டும் போதும்,
எதையும் தாங்கும்
எங்களின் தேசம் !
நாடுமில்லை
வீடுமில்லை
குந்தியிருக்க
எம் நிலமில்லை !
அன்னியன் கையில்
அன்னை நிலம்
மீட்க நினைத்தவர்
வீழ்ந்தனர் சதியால் !
எம்நிலம் காண
கனவுடன் நாளும்
விடிந்திடும் விடியலும்
மாற்றமே இன்றி
மறைந்திடும் பொழுதுகள் ஒருபுறம் .....
- மயிலையூர் தனு
விலைபொருள் சந்தையில்
விதியிலா
விவசாயி-ஒரு புறம் !
இல்லறம் நடத்தும்
மானிடன் உழைப்பு
சுரன்டி எடுக்க
இடைத்தரகன் நடுவிலே !
அடையாளம் அழிந்து
அடைக்கலம் புகுந்து
அடிமைகளாய்
அகதிகள்-ஒரு புறம் !
சூதாட்டம் சுகமென
விளையாட்டாய் விதைதூவ
விளையாட்டாய்
விளையாட்டு-ஒரு புறம் !
வேலை வேண்டி
காசைக் கட்டி
கவலையுடன்
இளைஞன்-ஒரு புறம் !
கடமை உணர்வை
கருக்கி எடுத்து விட்டு
காக்கி சட்டைக்குள்
காவல்-ஒருபுறம்!
காசை நிறைக்க
காப்பகம் நிறைக்கும்
கருணையிலா
பிள்ளைகள்-ஒரு புறம்!
திட்டம் தீட்டி
சத்தம் இன்றி
களவாடும்
களவானி-ஒரு புறம்!
வட்டி உயர்த்தி
பெட்டி நிறைத்து
துண்டைப்போடும்
நிதிநிறுவனம்-ஒரு புறம்!
அடுத்த பெண்ணின்
அணிகலனை அட்டவணையிட
அழுக்கு மகளிர்
அழகிகள்-ஒரு புறம் !
முகநூல் சென்று
முகவரி இழந்து
முடங்கிடும்
முயல்கள்-ஒரு புறம் !
ஒரு புறம்
மட்டும் போதும்,
எதையும் தாங்கும்
எங்களின் தேசம் !
நாடுமில்லை
வீடுமில்லை
குந்தியிருக்க
எம் நிலமில்லை !
அன்னியன் கையில்
அன்னை நிலம்
மீட்க நினைத்தவர்
வீழ்ந்தனர் சதியால் !
எம்நிலம் காண
கனவுடன் நாளும்
விடிந்திடும் விடியலும்
மாற்றமே இன்றி
மறைந்திடும் பொழுதுகள் ஒருபுறம் .....
- மயிலையூர் தனு