என் வீட்டு முற்றத்தில்
தென்னை மரங்கள் உயர்ந்து நிற்கும்
மாமரங்கள் காய்த்திருக்கும்
முற்றத்தில் பூமரங்கள் சிரித்திருக்கும்
தெருவோரம் நிழல்தரு மரங்கள்
வெய்யிலை தன்னகத்தே வீழ்த்தி
எம்மவர்க்கு நிழல் தந்திருக்கும்
அருகருகே நின்று அழகளித்திருக்கும்
தென்னை மரங்கள் உயர்ந்து நிற்கும்
மாமரங்கள் காய்த்திருக்கும்
முற்றத்தில் பூமரங்கள் சிரித்திருக்கும்
தெருவோரம் நிழல்தரு மரங்கள்
வெய்யிலை தன்னகத்தே வீழ்த்தி
எம்மவர்க்கு நிழல் தந்திருக்கும்
அருகருகே நின்று அழகளித்திருக்கும்
நாம் தேர் இழுத்த வீதியில்
போர் உடையில் ரானுவம்
நின்றிருக்கவும் மாட்டார்கள்
ஓடித்திரிந்த இடமெங்கும்
முட்கம்பி வேலியும் இருக்காது...
கடற்கரையில் சிறுவர்க்கு ஓர் பூங்கா
பெரியோர்க்கு இளைப்பாற ஓர் திண்ணை
ஊரின் நடுவே இளைஞர்க்கு ஓர் மைதானம்
இவையெல்லாம் இருந்திருக்கும்...
இடம்பெயர்ந்து நாமிருக்கும் ஊர்களிலே
எம்மூரார் பெற்றுக்கொடுத்த கேடயங்கள்
பதக்கங்கள் எல்லாம் எமதூர் விளையாட்டு
கழகத்தில் அழகாய் காட்சியளித்திருக்கும்...
மயிலிட்டி துறைமுகம் எங்கும் படகுகளும்
வள்ளங்களும் நிறைந்திருக்கும்
யாழ்ப்பாணத்தின் எழில்மிகு ஊராக
மயிலிட்டி இப்போதும் இருந்திருக்கும்....
மடிந்த உறவுகளும் உயிரோடு இருந்திருக்க
மாறிய வாழ்வும் மாறாமல் இருந்திருக்கும்
பாதை மாறாமல் பச்சையாய் இருந்திருக்கும்
பாரம்பரியமும் எம்மோடு இருந்திருக்கும்.....
மயிலையூர் தனு..
போர் உடையில் ரானுவம்
நின்றிருக்கவும் மாட்டார்கள்
ஓடித்திரிந்த இடமெங்கும்
முட்கம்பி வேலியும் இருக்காது...
கடற்கரையில் சிறுவர்க்கு ஓர் பூங்கா
பெரியோர்க்கு இளைப்பாற ஓர் திண்ணை
ஊரின் நடுவே இளைஞர்க்கு ஓர் மைதானம்
இவையெல்லாம் இருந்திருக்கும்...
இடம்பெயர்ந்து நாமிருக்கும் ஊர்களிலே
எம்மூரார் பெற்றுக்கொடுத்த கேடயங்கள்
பதக்கங்கள் எல்லாம் எமதூர் விளையாட்டு
கழகத்தில் அழகாய் காட்சியளித்திருக்கும்...
மயிலிட்டி துறைமுகம் எங்கும் படகுகளும்
வள்ளங்களும் நிறைந்திருக்கும்
யாழ்ப்பாணத்தின் எழில்மிகு ஊராக
மயிலிட்டி இப்போதும் இருந்திருக்கும்....
மடிந்த உறவுகளும் உயிரோடு இருந்திருக்க
மாறிய வாழ்வும் மாறாமல் இருந்திருக்கும்
பாதை மாறாமல் பச்சையாய் இருந்திருக்கும்
பாரம்பரியமும் எம்மோடு இருந்திருக்கும்.....
மயிலையூர் தனு..