காத்தவராயன் சிந்து நடைக் கூத்து - தொடர் – 02
சண்முகநாதன் கஜேந்திரன் (மயிலைக்கவி)
முத்துமாரியம்மன் வரவுப் பாடல்
அக்காளும் அம்மன் தங்காளுமாம் – அவா
ஆயிழைமார் அம்மனுக்கு ஏழு பேராம்.
ஏழு பேர்க்கும் அம்மன் நேரிழையாள் – அவா
இடும்பி என்னும் நல்ல மாரியல்லோ.
கொள்ளிக் கன்னி நல்ல மாரியல்லோ – அவா
குடிகளுக்கோ னல்ல வீரசக்தி.
சண்முகநாதன் கஜேந்திரன் (மயிலைக்கவி)
முத்துமாரியம்மன் வரவுப் பாடல்
அக்காளும் அம்மன் தங்காளுமாம் – அவா
ஆயிழைமார் அம்மனுக்கு ஏழு பேராம்.
ஏழு பேர்க்கும் அம்மன் நேரிழையாள் – அவா
இடும்பி என்னும் நல்ல மாரியல்லோ.
கொள்ளிக் கன்னி நல்ல மாரியல்லோ – அவா
குடிகளுக்கோ னல்ல வீரசக்தி.
ஆங்காரம் கொண்ட மாரியல்லோ – அவா
அகோரம் உள்ள நல்ல வீரசக்தி. தேசாதி அம்மன் தேசமெல்லாம் – தாயார் திருநடனம் அம்மன் செய்ய வந்தாள். திருநடனம் மாரி செய்யவென்று – இந்த தேவியாரும் மாரி ஓடிவந்தாள். சந்தனப் பலகையிலே முத்துமாரியம்மன் – அவா சாய்ந்து விளையாடி வாறாள் மாரிதேவி அம்மன். குங்குமப் பலகையிலே முத்துமாரியம்மன் – அவா கூத்தாடி வாறாவாம் மாரிதேவி அம்மன். பத்திரிக்கை தானெடுத்தோ முத்துமாரி அம்மன் – தாயார் பவனி வலம் வாறாவாம் மாரிதேவி அம்மன். வேப்பிலையைக் கைப்பிடித்தோ முத்துமாரி அம்மன் – தாயார் வீதி வலம் வாறாவாம் மாரி தேவி அம்மன். தன்னுடைய மாளிகைக்கோ முத்துமாரி அம்மன் – இப்போ தானோடி வீற்றிருந்தாள் மாரிதேவி அம்மன். பொது வசனம் : முத்துமாரி அம்மன் தனது மாளிகையில் வீற்றிருக்க அவரது தமக்கையாராகிய பூமாதேவி அம்மன் பூமி பாரம் தாங்கமுடியாது தங்காளிடம் முறையிடப் போகிறாள். பூமாதேவி அம்மன் வரவுப் பாடல் பூமாதேவி பாடல் : பூமியைத் துளைத்தெல்லவோ பூமாதேவி அம்மன் – அவா பூவாய் மலர்ந்தாவாம் பூமாதேவி அம்மன். தண்டை கலகல என்ன பூமாதேவி அம்மன் – தன்னுடைய தாமரைக்கால் தானசைய பூமாதேவி அம்மன். முத்தோ மொலு மொலென்ன பூமாதேவி அம்மன் – தன்னுடைய மோதிரக்கால் தானசைய பூமாதேவி அம்மன். பூமிபாரம் தாங்காமலே பூமாதேவி அம்மன் – இப்போ போறாவாம் தங்கையிடம் பூமாதேவி அம்மன். தங்காள் அரண்மனையில் பூமாதேவி அம்மன் – அவா தானோடி வந்து நின்றாள் பூமாதேவி அம்மன். முத்துமாரி வசனம் : அக்கள் வாருங்கள் இவ் ஆசனத்தில் அமருங்கள். தாங்கள் இங்கே வந்ததன் நோக்கம் அறியலாமா ? பூமாதேவி வசனம் : தங்காள் நீயோ செல்வச் செருக்கினால்விளையாடித் திரிகிறாய். நானோ பூமிபாரம் தாங்காது அவஸ்தைப் படுகிறேன். முத்துமாரி வசனம் : அதுக்கு நான் என்ன செய்யவேண்டும் அக்காள் ? பூமாதேவி வசனம் : தங்காள் நீ பிறப்பு ஆயிரத்தொன்றும், இறப்பு ஆயிரமும் ஆக்கி வைப்பது உன் கடமை நான் சென்று வருகிறேன். முத்துமாரி வசனம் : அப்படியே செய்கிறேன் அக்காள். நீங்கள் சென்று வாருங்கள். பூமாதேவி பாடல் : தன்னுடைய மாளிகைக்கோ பூமாதேவி அம்மன் – அவா தானோடிப் போறாவாம் பூமாதேவி அம்மன். தொடரும்…….. |
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.