
முல்லைத்தீவு குமுளமுனைப் பிள்ளையார் ஆலய கயமுகாசூரன்
![]() கலாபூஷணம் செல்லப்பா சண்முகநாதன் அவர்களின் பட்டறையிலிருந்து ஆலயங்களுக்காக உருவாக்கப்பட்ட தெய்வங்களின் வாகனங்கள். முல்லைத்தீவு குமுளமுனைப் பிள்ளையார் ஆலய கயமுகாசூரன்
0 Comments
![]()
காத்தவராயன் சிந்து நடைக் கூத்து தொடர் – 03
சண்முகநாதன் கஜேந்திரன் (மயிலைக்கவி) முத்துமாரியம்மன் வசனம் : அக்காள் சொன்ன முறைப்படி பிறப்பு ஆயிரமும் இறப்பு ஆயிரத்தொன்றும் சரிவர நடாத்திவைக்க வேண்டுமெனில், நான் அந்த வைகைக் கரையோரம் சென்று தவமிருக்க வேண்டும். இதோ வைகைக்கரை செல்கிறேன். முத்துமாரியம்மன் பாடல் : வைகைக்கரை தேடியெல்லோ முத்துமாரியம்மன் தாயார் வடிவழகி போறாவாம் மாரி தேவியம்மன் ![]()
ஆசான்களின் அன்னை
மயிலைக்கவி என்ற புனை பெயரில் திரு சண்முகநாதன் கஜேந்திரன் அவர்கள் (myliddy.fr) எமது மயிலிட்டி (ourmyliddy.com) ஆகிய இணையத்தளங்களிற்கு எழுதிய கவிதைகள் சில ஒலி,ஒளி பேழையாக 'வந்தவழி' எனும் பெயரோடு இறுவெட்டாக கடந்தாண்டு 11 September (2016) அன்று கனடா மிசிசாகா ஜெயதுர்க்கா தேவஸ்தானத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. .அவ் இறுவெட்டில் உள்ள பத்துக் கவிதைகளும் ஒலி, ஒளி வடிவில் எமது இணையங்களில்............ ![]()
காத்தவராயன் சிந்து நடைக் கூத்து - தொடர் – 02
சண்முகநாதன் கஜேந்திரன் (மயிலைக்கவி) முத்துமாரியம்மன் வரவுப் பாடல் அக்காளும் அம்மன் தங்காளுமாம் – அவா ஆயிழைமார் அம்மனுக்கு ஏழு பேராம். ஏழு பேர்க்கும் அம்மன் நேரிழையாள் – அவா இடும்பி என்னும் நல்ல மாரியல்லோ. கொள்ளிக் கன்னி நல்ல மாரியல்லோ – அவா குடிகளுக்கோ னல்ல வீரசக்தி. ![]()
மயிலைக்கவி என்ற புனை பெயரில் திரு சண்முகநாதன் கஜேந்திரன் அவர்கள் myliddy.fr, எமது மயிலிட்டி ஆகிய இணையத்தளங்களிற்கு எழுதிய கவிதைகள் சில ஒலி,ஒளி பேழையாக 'வந்தவழி' எனும் பெயரோடு இறுவெட்டாக கடந்தாண்டு 11 September (2016) அன்று கனடா மிசிசாகா ஜெயதுர்க்கா தேவஸ்தானத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. .அவ் இறுவெட்டில் உள்ள பத்துக் கவிதைகளும் ஒலி, ஒளி வடிவில் எமது இணையங்களில்............
ஜெகன்நாரா கஜேந்திரன் அவர்களின் திருமண நிகழ்வினை நேரலையில் 07ம் திகதி கனடா நேரம் காலை 06:10 இலிருந்து காணலாம்.
![]() வேள்விக்கு சமித்திடுவோம்.. ★★★★★★★★★★★★★★★ வனவாசம் முடித்து புது வாழ்வு வாழ புறப்பட்டு விட்டோம் . இனி எவன் வந்து எமைத்தடுத்தாலும் , அவனுக்கு அடங்கோம். ஆறுமுக சாமி வீதியில் ஆரம்பம் , முனையன் வளவான் வீதி வரை தொடர்வோம் . சிதம்பரம் ஆச்சி மகன் சிவராசா அண்ணனை பார்த்தேன் பிராயடி பகுதியின் பெருங் குடி மகனவன். நெக்குருகி நின்றான் . சொந்தவூரை பிரிந்ததினால் புனர்வாழ்வு தர வேண்டாம் , புனரமைப்பும் செய்ய வேண்டாம் மகிழ்வோடு நாம் வாழ மயிலிட்டியை மட்டும் தா . மறு மாதமே மகுடம் சூடுவோம் மாங்கனி தீவினில் ஓர் பூங்கனிச்சோலை செய்வோம். நீரில் மூழ்கி எழ எங்கள் பாவம் பறந்தோடும் பஞ்சம் பயந்தோடும் . மாத்தறை சம்மாட்டி மகன் மங்களவின் ஐஸ் வான்கள் அணிவகுத்து நிற்கும். வீர மாணிக்க தேவன் துறையில்.. நாங்கள் ஐம்பதுக்கு ஐம்பது கேட்கவில்லை கேட்ட ஜி ஜி பொன்னம்பலமும் இல்லை. மூன்றில் ஒன்று தந்த முதுசங்கள் நாம் விட்டு விடு எம்மை வீண் வம்பு வேண்டாம் அசுரர் குடி அழித்த அழகா ! உனது வீதியில் நடக்கிறது யாகம். அகிலமெல்லாம் பரந்திருந்து சமித்திடுறோம் நாங்கள் கொழுந்து விட்டெரியும் தீ நன்மையாய் அமையட்டும் நாடாளும் மன்றங்களே! நீங்களும் நெய் விடுங்கள் அண்ட சராசரமும் அதிரட்டும் விண்ணதிரும் வேள்வியால் எமக்கு விடிவு பிறக்கட்டும் . மயிலைக்கவி சண் கஜா |
என்னைப்பற்றிசண் கஜா (மயிலைக்கவி) ![]() பெயர்:
Anton Gnanapragasam கருத்துக்கள்: சிற்ப்பகலைஞர் செல்லப்பா (பிள்ளையார்) சண்முகநாதன் மகன் கஐன் (மயிலை கவி) மயிலை மண் வீழ்ந்து 22 ம் அகவைக்கு அழகாக கவி படைத்ததிற்கு என் வாழ்த்துகள். இவரின் தந்தை ஓர் சிற்பாசாரி மட்டுமன்றி ஓர் கவிஞரும் என்பதை பதிவு செய்ய விரும்புகின்றேன். பதிவுகள்
August 2017
முழுப் பதிவுகள் |
|