(படித்ததில் பிடித்த கருத்துக்களும் இதனுள் அடங்கும்)
(எனது இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட்டது
www.sounthyen.blogspot.com)
முத்தெடுக்க கடலில் மூழ்கி வெறுங்கையுடன் வந்தால் கடலில் முத்து இல்லை என்பது அர்த்தமல்ல நமது முயற்சி போதவில்லை என்பதே அர்த்தமாகும்.
முழு மனதோடு நம்புகிற ஒரு காரியத்தை துணிந்து செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். குறுக்குவழி தெரிந்தால் மட்டுமே ஜெயிக்கலாம் என்ற எண்ணம் தப்பானது.
நேர்மையா தொழில் செய்தால் எல்லா ராசியும் நல்ல ராசிதான்.
சாதாரண புழுவுக்கு சிறகு கிடைத்துவிட்டால் அது பட்டாம்பூச்சி ஆகிவிடுவதை புழுவாய் துடிக்கும் மனிதன் உணர்வதே இல்லை.
ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண்ணும் அதேபோல பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் ஆணும் இருப்பதாகக் கூறுவது பொருத்தமற்றது. ஆணும் பெண்ணும் இணைந்து வெற்றியின் சின்னமாக அமைவதே சிறந்தது
நீங்கள் பேசிய பேச்சு ! தவறவிட்ட சந்தர்ப்பம் ! நீங்கள் இழந்த ஒரு கணம் ! இவை மூன்றும் திரும்பி வரவே வராது.
நன்றாக வாழ்ந்த வாழ்க்கையின் நினைவுகளே வாழ்க்கையை இனியதாக்கும்.
உன்னால் என்ன செய்ய முடியும் என்பதை வைத்து உன்னை மதிப்பிடுகிறாய் ஆனால் மற்றவர்கள் நீ செய்ததை வைத்து உன்னை மதிப்பிடுகிறார்கள்.
ஒரு மனிதனுடைய கால்கள் நாட்டில் ஊன்றியிருக்க வேண்டும் ஆனால் கண்கள் உலகத்தை ஆராய வேண்டும்.
நேரம் கிடைத்தால் சந்தோசமாக இருக்கலாம் என்று எண்ணியபடி பலர் தங்கள் வாழ்வை எதிர்பார்ப்பிலேயே வைத்திருக்கிறார்கள். ஆனால் நிகழ்காலம் மற்ற காலங்களைவிட மேலானது என்பதை பலரது அறிவு கண்டு பிடிக்காமலே இருக்கிறது.
நீ பெரிசா நான் பெரிசாங்கறது
இல்லம்மா வெற்றி. நீங்க
ரெண்டு பேரும் சேர்ந்து வாழுற
வாழ்க்கை பெரிசுங்கறதை நீயும்
அவரும் புரிஞ்சுக்கணும்.
அதுதாம்மா வெற்றி.
ஒரு மனிதனின் மதிப்பு அவன் வாழ்ந்த வருடங்களின் எண்ணிக்கையாலோ அல்லது செய்த வேலையாலோ அளக்கப்படுவதில்லை. ஒரு மனிதனின் மதிப்பு அவன் உருவாக்கிய நடத்தையால்தான் அளக்கப்படுகிறது.
காதல் இன்பம் கடுகளவு தான் அதனால் ஏற்படும் போராட்டமோ வாழ் நாள் முழுவதுமே..
ஒரு கணவனின் பலம் அவன் கையிலிருக்கும் பணத்தில் இருக்கிறது.ஒரு மனைவியின் பலம் அவள் கண்ணீரில் இருக்கிறது.
ஒரு பெண்ணின் ஒரு பெண்ணின் மனத்தில் பணத்தால் நுழைவதைவிட அன்பால் இடம்
பெறுவது நிரந்தரமாகும் -
தொடரும்............