மயிலிட்டி மண்ணை எப்படி மறக்க முடியாதோ, அப்படித்தானே வாழ்ந்த வீடும் மறக்க முடியாதது. எத்தனை நாடுகளில் எப்படிப்பட்ட வீடுகளில் வாழ்ந்தாலும் பிறந்து வளர்ந்த வீட்டின் ஸ்பரிசம் என்றுமே மேன்மையானது, யாராலும் மறுக்கவும் முடியாது, மண்ணும் வீடும் மனசுக்குள் நின்று எப்போதும் காதல் செய்துகொண்டே இருக்கும்.
எங்கள் வீடு எனக்கு எப்போதுமே சொர்க்கம்தான். ஊரில் இரண்டு ஒழுங்கைகளுக்கும் நடுவில் அமைந்திருந்தது. பெருமைக்குரிய பெற்றோல் செற் முன்பக்கமும், சொந்தங்களின் வீடுகள் தொடர்ச்சியாக பின்பக்கமும். இரும்புக் கேற் உள்ளே முன் முற்றத்துடன் வீடு. அதனைத் தாண்டி பின்வளவு பெரிய வேப்பமரம், அருகே பின்நாளில் கட்டப்பட்ட «புதுவீடு» என்றழைக்கப்படும் சிறியவீடு. முன்முற்றத்திலும் பின் வளவிலும் பூந்தோட்டங்கள் மணிவாழை, செவ்வந்தி, வாடாமல்லிகை, கிறிசாந்தி, குறோட்டன்கள், செவ்வரத்தைகள், பல நிறங்களில் பட்டுரோஜா, நாலுமணிக் கண்டு என நீண்டுகொண்டே போகும். எப்பொழுதும் பின்வாசல் கேற் மூடியிருக்கவேண்டும் இல்லையேல் ஆடுகள் வந்து ஆசையுடன் அனைத்தையும் மேய்ந்துவிட்டுப் போய்விடும். இரண்டு கிணறுகள் ஒன்று எங்கள் பாவனைக்கு மற்றையது பின்கேற் அருகில் பொதுப்பாவனைக்கு ஒரு தேமாமரத்துடன்.
நெல்லிமரம், சில பப்பாசிமரங்கள், தென்னைமரங்கள், மாதுளைமரம், முருங்கைமரம், வாழைகள், தேக்குமரம் என எல்லாமுமாகி இருந்தன. ஐரோப்பாவில் பூங்கன்றுகளைத் தவிர மற்றவையெல்லாம் பார்க்கமுடியுமா ???
முற்றத்து மல்லிகைப் பந்தல் எங்களின் வசந்தபுரி. மாலை நேரம் மல்லிகை மொட்டுக்கள் பூக்கத் தொடங்கும், பூக்ககூடிய மொட்டுக்களைப் பார்த்து அதன் நுனியில் விரலால் மெதுவாகத் தட்ட சத்தம் போடாமல் அழகாக விரியும். எத்தனை மொட்டுக்களை அவிழ்த்திருக்கின்றோம். அதில் கிடைத்த சந்தோஷம் அதே முற்றத்தில், அதே மல்லிகைப் பந்தலின்கீழ் மீண்டும் கிடைக்குமா? ஒருபக்கம் இரவு வீட்டுப்பாடம் நாங்கள் படித்துக்கொண்டிருக்க, பந்தலின் கீழே அப்பா, அம்மாவின் நண்பர்கள் நண்பிகள் என ஒன்றாக இருந்து பேசிக்கொண்டிருப்பார்கள். மேலே ஒருபக்கம் மொட்டுக்கள் பூத்துக் கொண்டிருக்க, முதிர்ந்த பூக்கள் ஒவ்வொன்றாக கீழே விழுந்து கொண்டிருக்கும். பாடம் முடித்து, இரவுச் சாப்பாடும் முடித்தபின்பு படுக்கைக்குச் செல்லுமுன்பு பந்தலின் கீழ் சிரிதுநேரம் இருந்து விழும் பூக்களைத் தேடி எடுத்து அம்மாவிடம் கொடுப்போம். இரவு நேரங்களில் கைக்கெட்டிய தூரத்தில் மல்லிகைப் பூக்களை நட்சத்திரங்களாக அந்தப் பந்தலில் கண்டேன். எங்களுக்குப் பெரிய மல்லிகை மரமாக அது இருந்தாலும் அதனுடைய தாய் மல்லிகை எங்கு இருக்கின்றது என்றும், அதிலிருந்துதான் « பதிவு » எடுத்தது என்றும் எமது பெற்றோர் சொல்லி, அந்தத் தெரிந்தவர் வீட்டிற்குப் போகும்போதெல்லாம் அந்தத் தாய் மரத்தைத் தொட்டுப் பார்த்த ஞாபகம் நிறைய உண்டு.
இரவு முழுவதும் எவ்வளவு பூக்கள் விழுந்திருக்கும் என்று பார்ப்பதற்காகவே, காலையில் முற்றம் கூட்டுவதற்கு முன்பே எழுந்து ஓடிச்சென்று பார்ப்போம். பந்தலின் கீழே நிலத்தை மறைக்கும் அளவிற்கு விழுந்திருக்கும். அவற்றைப் பார்க்க அழகாகத்தான் இருக்கும். இருப்பினும் மரத்தை விட்டுப் பிரிந்துவிட்டதே அல்லது மரத்திலேயே இருந்திருக்கலாமே என்ற கவலை வந்துபோகும்.
விஷேச நாட்களில் தலைக்கு வைப்பதற்கு மல்லிகை மொட்டு மாலைக்காக பந்தலில் ஏறி மொட்டுக்கள் பறிப்போம். எவர்சில்வர் கிண்ணத்தில் நிறைத்துக்கொண்டு இறங்குவோம்.
அதனருகே செவ்வரத்தை மரம், அது வந்ததற்கும் ஒரு கதை உண்டு. ஒருமுறை கடற்கரையில் நேரம்கடந்து விளையாடிக்கொண்டிருந்த எங்களைத் தேடிவந்த எங்கள் அம்மா அடிப்பதற்காக தடி தேடியபோது பொன்னையா சம்மாட்டியார் வீட்டின் மூலையில் இருந்த பெரிய செவ்வரத்தையில் எட்டித் தற்செயலாக முறித்ததடிதானாம் அது. வீடுவரை கொண்டுவந்த அந்தத் தடியை எறிய மனமில்லாமல் தண்ணிப் பைப்பிற்குப் பக்கத்தில் ஊன்றிவிட, எங்களுடன் இருப்பதற்கு ஆசைப்பட்டுத் துளிர்விட்டு வளர்ந்து எங்களுடன் ஒன்றிவிட்டது என்று அம்மா அடிக்கடி சொல்லிய ஞாபகம் உண்டு. மறுபக்கம் நின்ற நித்தியகல்யாணியையும் மறக்கமுடியாது. பேருக்கேற்ப நித்தம் பூத்துக்கொண்டே இருக்கும்.
இவையெல்லாம் நினைவுகளாகவே போய்விட்டன. 1990 இன் பின்னர் அழிந்துபோன நிஜங்கள். மூன்று தசாப்தங்களாக மீட்டிக்கொண்டிருக்கும் நினைவுகள், மூச்சு நிற்கும் வரை எண்ணத்திரையில் தன்னைப் பதியவைத்துக் கொண்டே இருக்கும்.
நமது ஊராம் மயிலிட்டியில் ஒருமூலையில் கால் பதிக்கத் தொடங்கிவிட்டோம். தொடர்ந்து முன்னேறுவோம். செழிப்பான மயிலிட்டியைச் சின்னாபின்னமாக்கி, மனைகளையும், மதச்சின்னங்களையும் சுத்திகரிப்புகள் செய்துநமது மயிலிட்டி மண்ணையும் மரங்களையும்தான் எமக்காக வைத்திருக்கின்றார்கள்.

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.