மயிலிட்டி ஆலயங்களின் பாடல்கள் வெளியீட்டிற்காக அனைத்து நாடுகளிலிருந்தும் மனமுவந்து பணஉதவி செய்தோரின் மற்றும் செய்ய இருப்போரின் விபரங்கள் மயிலிட்டி மீள்குடியேற்றக் குழுவினரால் விரைவில் அனைத்து மயிலிட்டி இணையங்களுக்கும் அறியத்தர உள்ளார்கள். கிடைக்கப் பெற்றதும் பிரசுரிக்கப்படும்.
மயிலிட்டி இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றக்குழு எமது ஊரில் உள்ள ஆலயங்களினை நினைவுகூரும் வகையில் பாடல்கள் அமைத்துள்ளனர். அவற்றை இந்தியாவிலுள்ள பாடகர்கள் மூலம் பாடி CDயில் பதிவு செய்யும் முயற்சியைத் தொடங்கியுள்ளனர். இம்முயற்சிக்கு புலம்பெயர்ந்து வாழும் மயிலிட்டி உறவுகளிடம் பண உதவியை எதிர்பார்க்கின்றார்கள். உறவுகளே இந்த அரிய முயற்சி இனிதாக நிறைவேற எங்களால் முடியுமான பங்களிப்பை செய்து உதவுவோம். இதற்காக அவர்கள் எமது ஒன்றியத்துக்கு அனுப்பிய கடிதத்தை கீழே இணைத்துள்ளோம். நன்றி!
உதவி செய்ய விரும்புவோர் எமது நிர்வாகத்தினருடன் தொடர்பு கொள்ளவும், எழுத்து மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். நன்றி!
உதவி செய்ய விரும்புவோர் எமது நிர்வாகத்தினருடன் தொடர்பு கொள்ளவும், எழுத்து மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். நன்றி!