வாழும் வயதில் வரலாறாகி போனாயோ!
உன் நினைவுத் துதி பாடவா ?
உனைப் பெற்ற ஊர்ப் புகழ் கூறவா?
அல்லது நம் இனப் பெருமை சொல்லவா ?
அண்டம் தொட்டு நிற்க்கும் அக்கினி குஞ்சை
ஐரோப்பாக் கண்டத்தில் தந்துவிட்டு,
கண்டங்கள் தாண்டி கடவுளுக்குள் சென்றுவிட்டாய் .
விண் தொட நிமிர்ந்த வித்துவத்தை தந்து விட்டு
விண்ணுக்கு சென்று விட்டாய்.

நல்லவனே! ஞானகுலேந்திரனே!
வல்லவனே எங்கள் வம்சத்தோனே!
வாழும் வயதில் சாவின் மடியில் சரிந்தவனே!
நீ சாகவில்லை. எம்முள் வாழுகிறாய்.
பேசுகிறாய், எம்மோடு நீ பேசுகிறாய்,
உன் மகள் பெருமை கூறுகிறாய் ,
அப்பையா கடையின் கடைக்குட்டியே !
அன்பு நண்பர்கள் உன் புகழ் பாடுகிறார் .
*************************************************
ஈ, எறும்பு, காக்கைக்கும் தீது நினையா செம்மலே!
கென்றியரசர் கல்லூரியின் காற்பந்து வீரனே !
கனிவான உன் பேச்சு இன்றும் எம் கண் முன்னே ,
என்று நீ சென்றாயோ அன்று மங்கிய உன் வீட்டொளி
இன்று பொங்கி ஒளிர்கிறது உலகெங்கும் .
அரிவரியில் அப்பன் பெயர் சொல்லும் பிள்ளையும் ,
அட்வான்ஸ் லெவலில் பிள்ளை பெயர் சொல்லும் அப்பனும்
உலக வழக்கன்றோ ,
இன்று சிவோனின் அப்பாவாய் நீ பெருமை காண்கிறாய்
உன் சாவும் சரித்திரம் ஆனது .
மகள் ஆய்வும் சாதனை ஆனது
விரைவில் நீ அறிவாய் விண்வெளி
செல்லும் முதல் ஈழப் பெண்ணின் பெயர்...........