இன்னல்கள் மின்னல் வேகத்தில் போகலாம். ஆனால் எம்மவர்க்கு இன்னல்கள் தான் இலவச விருந்தாளி.இவர் வந்தால் போவதில்லை. இவரை அனுப்பிட பல முயற்சிகள் எடுத்தாலும் அவருக்கு எமது பராமரிப்பு மிகவும் பிடித்துக் கொண்டு விடுவதுபோலும் அதனால் அவர் எம்மை விட்டு அகல மறுத்து விடுகின்றார். இவர் எம்முடன் தத்துப் பிள்ளையானதும் குடும்பக் கட்டுப் பாடு செய்து கொள்வதில்லை.தன்னைத் தானே இனப் பெருக்கம் செய்து கொள்ளும் பண்புடையவரகின்றார். இவர் ஏற்படுத்தி விடும் வலிகளுக்கு நாம் வாழ்க்கைப் பட்டு விடுகின்றோம்..
வழிகள் அனைத்தையும் மூடி அவர் போடும் கூத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் இதம் இழந்து, சுகம் மறந்து, அன்பு பாசம் பற்று என யாவும் திறந்து திசைமாறிப் போன ஒரு வித மனித கூட்டமானோம்.. எங்கள் வீடுகளில் வாழ்ந்த அல்லது நாம் பிரியமுடன் வளர்த்த கால் நடைகளோ` பூனை நாய் போன்றவையோ எம்மை விட்டு பிரியும் நிலையிலும் அசைவதில்லை. விலைக்குப் போனாலும் வழிமாறிப் போனாலும் வில்லங்கத்துகு விரட்டி விட்டாலும் அது விம்மி வெடிக்கும். சில வாரங்களில் வளர்த்தவன் வீடு தேடி ஓடி வந்தும் விடும். இவை ஒரு காலத்தில் நாம் கண்டு அனுபவித்தவை.
இவற்றிற்கெல்லாம் முற்றிலும் மாறாக ஆறறிவு என அடிக்கடி அலட்டிக் கொண்டு எம்மில் பலர் திசை மாறிப் போனோம்.. அராஜகம் கட்டவிழ்ந்து அலங்கோலப் படும் போது தமது விருப்புக்களை நெருப்பில் தூக்கிப் போட்டு விட்டு பிள்ளைகள் நீங்கள் பிழைத்துக் கொள்ளுங்கள் எனும் அன்பு வாக்கியத்தால் எமை நனைத்து குறைந்த பட்சம் எஞ்சி இருந்த குடிலையும் அதனைத் தாங்கிக் கொண்டிருந்த காணியையும் ஈடு வைத்தோ, அறா விலைக்கு விற்றோ எம்மை வழி அனுப்பி வைத்தவரில் பலர் இன்று தேடு வாரற்று தெருவில் திக்கற்று நிற்க நாமோ இங்கு ஆலயங்களை எழுப்பி அருள் மிகு தெய்வங்கள் என நம்பி பக்தி முற்றி அலைகின்றோம்..!
கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது என்று யாரோ சொல்லி வைத்ததை அண்ட வந்த நாடுகளில் அடம் பிடித்து உருவாக்கி உலாவருகின்றோம். ஆனால் அங்கு எம்மை தம் வயிற்றில் குடி இருத்தி தம் நலம் மறந்து எம்மை வளப் படுத்தி உருத் தந்து உயிர் தந்து பேரிட்டு பெருமைகள் சேர்த்த கறுவறைத் தெய்வங்கள் தெருவினில் என அறிந்தும் அறியாமல் அலை பாயும் ஆசைகளுக்கு அடிமைகளாக்கித் திருவிழா பெருவிழா தேர்த்திருவிழாவென அடையாளங்களை தக்க வைத்திடப் படாத பாடுகள் பெரும் சிலுவைப்பாடுகள் தான். உண்மையில் எமக்கான அடையாளங்களைத் தந்தவர்களைத் திரும்பிப் பார்த்திட நேரம் இன்றி அலைகின்றோம்..
அவர்களுக்கென்ன அங்கு நிம்மதியாகத் தான் இருக்கின்றார்கள் எனப் பொய் முலாமினைப் பூசிய படி. புதுப் பயணம் புலம் பெயர் நாட்டிலே நடக்குது. ஒரு சிலர் பணத்தை அனுப்பி விடுகின்றார்கள். பணம் மட்டும் போதுமானதொன்றாகி விடுமா! அன்பு பாசங்களை அனுப்பும் பணம் ஈடு செய்து விடுமா! இதனைப் புரிந்து கொள்ள மறுக்கின்றோம்.ஏக்கங்களை உள் வாங்கிட முடியாமல் முளிக்கின்றோம்.
அண்மையில் தாயகம் சென்று வந்த நண்பர் ஒருவர் மூலம் கிடைத்த செய்தி அது. எமக்குப் படிப்பித்த ஆசிரியர் வீட்டுக்கு தான் போனதாகவும் அங்கு அவரின் நிலமை எல்லா வழிகளிலும் மோசமாகி விட்டதாகவும் தன் பிள்ளைகளின் தரிசணம் ஒன்றிற்காகத் தவமிருப்பதாகவும் அறிய முடிந்தது. அவருடைய மகள் இங்கு திருமணம் முடித்து வளமான வாழ்க்கை. எனக்கும் அவர்களுக்கும் பரிட்சயம் அதிகம்.. எனது அறிவுப் பசியைப் போக்கிய ஆசானோடு கதைத்து விட வேண்டும் என்ற அவாவில் அவருடைய மகள் வீட்டிற்கு ஓடிப் போன போது...
ஊருக்கு போணில் கதைத்த படி இருக்கின்றா எனக் கணவர் சைகையால் புரிய வைத்தார். எல்லோரும் கேட்கக் கூடியாதாக ஊரில் இருந்து கதைப்பவரின் குரல் கேட்டுக் கொண்டே இருந்தது.
கேட்ட குரல்...... பிள்ளை அப்பாவாலை முற்றிலும் ஏலாமல் வந்திட்டுது! வைத்தியர்மார் பிள்ளைகளை வசதி எண்டால் வந்து பார்க்கச் சொல்லுங்கோ! அவை வரும் வரைக்கும் தாக்குப் பிடிக்கின்றது கஸ்டம். விரைவு படுத்தச் சொல்லுங்கோ என்கிறார் பிள்ளை..
மகளின் பதில்.... அம்மா நிலமை விளங்குது. நீங்களும் இவளவு காலமும் அப்பாவோடை சரியாகக் கஸ்டப் பட்டிட்டியள். இனிக் கொஞ்சக் காலமாவது நிம்மதியாக இருக்க வேணும் அப்பாவின் கருமங்கள் முடிய இங்காலை வந்திடுற அலுவலைப் பாருங்கோ .
அம்மாவின் குரல்.. பிள்ளை நான் ஒரு நாளும் எதையுமே கஸ்டமாய்ப் பார்க்கேல்லை. அப்பாவைப் பாரமாயும் பார்க்கேல்லை. நீங்கள் ஒருக்கா வந்து பார்த்திட்டியள் என்றால் உங்களுக்கும் திருப்தி அவருக்கும் நிறைவாயிருக்கும்.
மகளின் பதில்.. அம்மா உடனை வெளிக்கிட்டு வாறதென்றால் நாங்கள் என்ன பக்கத்திலையா இருக்கிறம்.. அது மட்டுமில்லாமல் இப்ப தான் விடுமுறைக்கு சிங்கபூர் போட்டு வந்திருக்கிறம். நிலமைய புரிஞ்சு கொள்ளுங்கோ!
அம்மாவின் குரல்.. ஓம் பிள்ளை நீங்கள் இப்ப எங்களுக்குப் பக்கத்திலை இல்லை எண்டதும் தூரம் அதிகமாய்ப் போச்செண்டதும் விளங்குது.. சரி பிள்ளை அப்பா அவதிப் படுறார். வைக்கிறன்..
மகள். கோபம் மட்டும் வந்திடும்.. போணை வைச்சிட்டா! எதுவுமே புரிந்து கொள்ள முடியாத பருவத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இவள் பிள்ளை யார் மம்மி..?
அது உங்கடை அம்மம்மா!!! எதுவோ பிள்ளைக்கும் உறைத்திருக்க வேணும் ஒதுங்கிக் கொண்டான்.
இப்போது என்னை அவதானித்துக் கொண்ட மகள்.. வணக்கம் அண்ணை. அம்மாவோடை கதைச்சுக் கொண்டிந்தனான்.. அப்பாக்கு கொஞ்சம் கடுமையாம். உடனை வெளிக்கிட்டு வா எண்டிறா. கொஞ்சம் கூட யோசிக்கிறேலை..
என் மனம் உள்ளே குமுறுது எதை யோசிக்க வேணும். ஏன் உங்களை பெற்றாவெண்டோ!
நானும் கேள்விப்பட்டுத் தான் வந்தனான் உங்களிட்டை மாஸ்ரரின் நம்பரை வாங்கி ஒருக்கால் கதைப்பம் என்று. எத்தனை பேரை உருவாக்கின உயர்ந்த மனிதன்.. என் உள் மனம்.. ஆனால் உங்களைச் செதுக்க மறந்திட்டாரோ!
தொலை பேசி அழைக்கின்றது. இப்போது கணவன் எடுத்துக் கதைக்கின்றார்.. ஓம் சொல்லுங்கோ! ஆ! அப்பிடியா! இப்ப தான் மாமி கதைச்சவா! மகள் என்னவாம் .. அப்பா போட்டாராம்.
என்ரை ஐயோ! என ஆரம்பம்......
உள்மனம். நீங்கள் ஒருத்தரும் வர மாட்டியள் என்று மாஸ்டருக்குத் தெரிஞ்சிட்டுது போட்டாராக்கும்.. நடிக்காதையுங்கோ. உங்கடை பிள்ளை படிப்பிக்கும்... சரி தங்கச்சி இனி அழுது என்ன செய்கிறது. மாஸ்டர் போட்டார் கவலை தான். அவரிட்ட படிச்ச றூபன் போய்ப் பார்த்து கதைச்சுப் போட்டு வந்தவனாம். சேட்டொன்று குடுக்க இதை எனக்குப் போகேக்கை போட்டு விடுங்கோ என்றாராம்.. அவன் அழுது கொண்டு வந்திருக்கின்றான்..
இப்பெல்லாம் தூரங்களும் தொலைந்து கொண்டு தான் போகுது.
வலிகளுடன் இவன்.. (தயாநிதி தம்பையா)