தந்தை
மணமாலை சூடிய மங்கையவர் நெஞ்சில்
மனம் பூத்திட இராமனாக வாழ்ந்திடுபவர் தந்தை!
மனையாள் கர்ப்பந்தரித்தல் செய்தி கேட்டதும்
கர்ச்சித்திடுவார் சிங்கம்போல் ஆனந்தத்தில்!
நாளொரு மேனியாக குழந்தைமுகம் காணாமலேயே
கற்பனையில் வாழ்ந்திடுவார் தந்தையவர்!
பூவுலகில் மலர்ந்திட்ட மழலையை அள்ளிவாரி
உச்சிமுகர்ந்திடுவார் தந்தை!
மனைவியவளைக் கரம் கொண்டு அணைத்திடுவார்!
பிஞ்சுப்பாதத்தில் பித்தன்போல் முத்தமழை பொழிந்திடுவார்!
பட்டுக்கன்னமதில் சிந்தையிழந்தவன் போல் தடவிவிடுவார்!
எட்டி உதைக்கும் பாலகனை அள்ளிவாரி பாசமழை பொழிந்திடுவார்!
தவழ்ந்திடும் குழந்தையுடன் குழந்தையாகமாறி தவழ்ந்திடுவார்!
தளர்நடை பயிலும் குழந்தைக்கு நல்ல பயிற்சியாளனாகிடுவார்!
நிலாச்சோறு ஊட்டும் தாயுடன் சேர்ந்து கதைகள் பலபேசி மகிழ்ந்திடுவார்!
உழைத்த களைப்புப் போக்காமல் மழலை மனங்களை மகிழ்வித்திடுவார்!
ஊன் உறக்கமின்றி மழலைகளுக்காக வாழ்ந்திடுவார் தந்தை!
வஞ்சனை இல்லா நெஞ்சுடன் பஞ்சணையில் மழலைகளைத் தூங்கவைத்திடுவார் தந்தை!
மற்றவர் போற்ற தன் மழலைகளை வளர்த்திடுவார் தந்தை!
தோளோடு தோளாக வளர்ந்த குழந்தைக்கு
நல்ல உற்ற தோழனாகிடுவார் தந்தை!
உலகினை மழலை வலம்வர உழைத்திடும் உலகநாயகனாவார் தந்தை!
---- ச. சாந்தன்

|