
![]()
பொங்குது மகிழ்வில் மனம் பொங்குது திருவிழாக் காண மனம் பொங்குது தங்குது நினைவுகளுள்ளே தங்குது திரும்புது ஊர் நோக்கி விரும்புது.
0 Comments
![]()
புலமும் பலமும்.
அவ்வப்போது ஊரிலுள்ள குடும்பத்தினருக்குப் பணம் அனுப்பாவிட்டால் அங்கே நிலைமை சிக்கலாகி விடும். எனவே மூச்சிரைக்க ஓடியாவது அதை அனுப்பி விட்டால்தான் நிம்மதியாக இருக்கும். இந்த வருட நத்தார் தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் வேலையை முடித்துக் கொண்டு பணத்தையும் அனுப்பி விட்டு, ஓடோடி வீட்டுக்கு வந்து தொலைபேசியில் அழைக்க, அவர்கள் யாழ்ப்பாண நேரப்படி அரைச்சாம நித்திரையிலிருந்து எழுந்து ‘ஹலோ!’ என்று தூங்கி வழிய, பணம் அனுப்பியிருக்கும் விடயத்தை மட்டும் சொல்லி விட்டு தொடர்பைத் துண்டித்துக் கொண்டேன். நத்தார் தினத்திற்கு முந்தைய நாள் வேலையை முடித்து கொஞ்சம் நேரத்தோடு வீட்டுக்கு வந்து பணம் கிடைத்ததா என்று உறுதிப்படுத்திக் கொள்ள தொடர்பு கொண்டால், வழமையான விசாரிப்புக்களின் பின்னர், ![]()
எனக்கு சின்ன வயதில இருந்தே செத்த வீடு எண்டால் சரியான பயம். எங்கட வீட்டில இருந்து இடது பக்கமா ஒரு எழுநூறு மீற்றர் தூரத்தில ஒரு சுடுகாடு இருந்தது. வலது பக்கமா ஒரு எழுநூறு மீற்றர் தூரத்தில எங்கட ஊருக்குச் சொந்தமான(?) சேமக்காலை ( எங்கட ஊரில 'சவக்காலை' எண்டு சொல்லுவினம்) இருந்தது. அதக் கடந்துதான் நாங்கள் அடிக்கடி பயணம் செய்ய வேண்டி இருக்கும். நடந்து போகேக்குள்ள நெஞ்சு "பக்குப்பக்கு" எண்டு அடிக்கும்.
![]() இந்த ஒரு நாள் மட்டும் எதற்கு? தாயாய்த் தாரமாய் மாமியாய் மருமகளாய் மைத்துனியாய் சித்தியாய் அத்தனை பாத்திரங்களையும் உள்ளே சொல்லிக் கொடுக்காமலேயே கச்சிதமாய் செய்து முடிக்கிறோம் ஆனால் வெளியே மட்டும் இன்னும் பெண்ணுடல்கள் வீசப்பட்டுக் கிடக்கின்றன உடல் பலவீனத்தின் இயலாமையில் உள்ளத்தின் பலங்களும் சிந்தனைகளும் சிதைபட்டுப் பழிவாங்கப்படுகின்றன உலக இயக்கத்தின் முதற் காரணிகள் மிக இலகுவாக சீண்டப்படுகிறார்கள் உணர்வுகளை மதியுங்கள் சிந்தனைகளை ஏற்றுக் கொள்ளுங்கள் வேறுபாட்டைக் களைந்து விடுங்கள் பழிவாங்கலைத் தவிர்த்து விடுங்கள் உங்களைப் போலவே அவர்களையும் ஏற்றுக் கொள்ளுவீர்களாயின் இந்த ஒரு நாள் மட்டும் எதற்கு வாழ்த்துச் சொல்ல? வி.அல்விற். 07.03.2014. ![]() கருவேந்த உனை நாம் தவமிருந்தோம் கருவறையில் கவனமாய் சுமந்திருந்தோம் கதைகள் பல உள்ளேயே சொல்லி வந்தோம் கனவுகளை உன்னோடு சேர்த்தே சுமந்தோம் கதறி உயிர் வலித் துடிப்பில் பெற்றெடுத்தோம் கையேந்திய பொழுதில் எமை மறந்தோம் கண்ணசைவில் உலக அசைவழித்தோம் கையசைவில் புவியாளும் உவகை கொண்டோம் கைபிடித் தெழுத நீ பெருமை கொண்டோம் களங்கமின்றிப் பேச நீ பெருமை கொண்டோம் கண் விழித்து நோயிலே அருகிருந்தோம் மீண்டுமுனை மடியிலே தாலாட்டினோம் ![]() பலமாய் எழுந்திரு நாம் வளமாய் வாழ்வதற்கு- நம் நிலமகள் மடியிலே வாழ்ந்திடும் உரிமையுண்டு விதையிடா நிலங்களும் விளைந்திருக்கும் மண்புழுக்களும் வாவென்றழைக்கும் தூக்கத்திலும் கனவுகளாய் வதையுறும் நிலையிலும் விழித்திருக்கும் உள்ளூர வானோடும் மண்ணோடும் பிணைந்திருந்த காலங்கள் கடல ளந்த படகுகளும் ஆர்க்கும் அலைகளும் கால ளந்த தெருக்களும் ஆசை நினைவுகளும் கட்டிக் காத்திருந்த நம் உயிர் கொண்ட மனைகளும் கால வெள்ளத்தில் கொள்ளை போகலாமோ எத்தனை காலம் ஏதிலிகளாய் சொந்த மண்ணிலே செத்து வாழ்ந்திடும் நிலைதனை மாற்றிட வேண்டும் எத்துணை துயரம் தான் தோள்களிலே சுமந்தபடி நித்தமும் கூனிடும் நிலை நிமிர வேண்டும் வலிகளே வாழ்வாகிப் போனதோ நமக்கென்று வலி கொள்ளும் மனமதை தூரத் தூக்கியெறி வலி தான பிடி தன்னை நமதாக்கிக் கொண்டு வெல்லும் வழி கண்டு மீட்டிட நம் வாழ்வை. (பலமாய்....) வி.அல்விற். 15.11.2013. |
என்னைப் பற்றி
எனக்கு உயிர் கொடுத்து என்னை ஆளாக்கிய மண் காங்கேசன்துறையை அண்டியுள்ள ஊறணி எனும் கடலலை தாலாட்டும் சிற்றூர். மூழ்கி எழுந்த கடலும் மணல் பரப்பும் வானம் கொள்ளா தாரகைகளும் என்னை வாவென்று அழைக்கின்றன. பதிவுகள்
March 2017
"பாட்டன் வழி |