14 ம் ஆண்டு நினைவஞ்சலி
திரு. முருகுப்பிள்ளை தேன்கிளி
திருப்பூர், மயிலிட்டி
திரு. முருகுப்பிள்ளை தேன்கிளி
திருப்பூர், மயிலிட்டி
அ...ப்.....பா...
அப்பா என் அன்னைக்கும் அன்னை
என் அறிவிற்கும் அன்னை
அன்பிற்கும் அன்னை
என் அன்புத் தந்தை....
மார்க்கோபோலோவையும் மாயக்கண்ணனையும்
மண்வாசனையுடன் மனதிற்குள் ஏற்றினார்
எங்கே கற்றார் நானறியேன் பெற்றுக்கொண்டேன் பேரறிவை
பள்ளி செல்லாத மேதை பண்பாளப் பேதை பத்தரைமாற்றுத் தங்கம்...
எப்போதும் பசித்திருந்தார் எம்மை உண்ண வைத்து
எப்போதும் விழித்திருந்தார் எம்மை உறங்க வைத்து
எப்போதும் தவித்திருந்தார் எம்மை பெற்று வைத்து...
அடம்பிடித்து அழுதாலும் அடிக்காது அரவணைப்பார்
குடம் குடமாய் பாசம் கொட்டி குதூகலிக்க வைத்திடுவார்
பாலூட்டி தாய் கொடுக்க தாலாட்டி தூங்க வைப்பார்
பாராட்டி பாராட்டி பாதுகாத்தார் மிகையில்லை முழுஉண்மை
எழுதுவதற்கு இன்னுமுண்டு எழுதுகோல் போதவில்லை....
அதிசக்தி எனக்கில்லை மீட்டெடுக்க உன்னை
அதிகாலை கண்ணீர்துளிகள் எப்போதும் உனக்கே
ஆயிரம் வருடங்கள் ஆனாலும் ஆறாது அப்பா இப்பெருந்துன்பம்....
என் அப்பாவின் நினைவுநாளான இன்று
எனதும் என் தாய் சகோதரர்களினதும் அஞ்சலிகள்...
அவர் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திகிறோம்..
குடும்பத்தினர்,
சங்கீதா தேன்கிளி