யா/ மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்வு - 2025
இன்றைய தினம் 08/10/2025 மயிலிட்டி வடக்கு கலைமகள் மகாவித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
இன்றைய தினம் 08/10/2025 மயிலிட்டி வடக்கு கலைமகள் மகாவித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
மாணவர்களும் பெற்றோரும் இணைந்து இந்த நிகழ்வினை சிறப்பாக நடாத்தினார்கள். ஆசிரியர்களுக்கு மலர்மாலை அணிவித்து பிரதான மண்டபத்திற்கு மாணவர்களது நடன நிகழ்வுடன் அழைத்து வரப்பட்டார்கள்.
பின்னர் அதிபர் ஆசிரிய பெருந்தகைகள் அனைவரினாலும் மங்கள விளக்கேற்றல் நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, தேவாரம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து ஆசிரியர்களால் ஆசிரியர் கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் அதிபர் உரை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து, ஆசிரியர் ஒவ்வொருவருக்கும் மாணவர்களால் அன்பளிப்புகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
அத்தோடு பழைய மாணவர்களும் அதிபர் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்து மடல் பழைய மாணவர்களின் சார்பில் அமரர். குணபாலசிங்கம் அவர்களின் மகள் திருமதி. கண்ணன் அருண்மதி அவர்கள் வழங்கி வாழ்த்தி சிறப்பித்தார்.
பின்னர் மதிய போசனம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர்களின் மாணவர்களின் கலை நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன.
இறுதியாக, நன்றி உரை, பாடசாலை கீதத்துடன் நிகழ்வுகள் யாவும் சிறப்பாக நிறைவு பெற்றன.
பின்னர் மதிய போசனம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர்களின் மாணவர்களின் கலை நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன.
இறுதியாக, நன்றி உரை, பாடசாலை கீதத்துடன் நிகழ்வுகள் யாவும் சிறப்பாக நிறைவு பெற்றன.