யா/மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்தில் 2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப்பரீட்சையிலும் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 19/09/2025 வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
|
பாடசாலையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை பாடசாலையின் நுழைவாயிலில் இருந்து பாண்ட் இசை வாத்தியத்துடன் அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் புடைசூழ கௌரவமாக மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டார்கள்.
தொடர்ந்து மங்கள விளக்கேற்ற நிகழ்வு இடம்பெற்றது. பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்கள் அதிபர் பழைய மாணவர்கள் ஆசிரியர்கள் ஆகியோரால் மங்கள விளக்கேற்றல் நிகழ்வு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து அதிபரினால் தலைமை உரை இடம்பெற்றது. பின்னர் சிறந்த பெறுபேறுகளை பெற்று சித்தி அடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்ரது. அதன்போது பழைய மாணவர் சங்கத்தால் க/பொ/த சாதாரணதரப் பரீட்சையில் சித்தி அடைந்த ஒவ்வொரு மாணவர்களுக்கும் தலா 5000 ரூபா பெருமதியான பணம் வங்கியில் வைப்பிலிட்டு அதற்கான புத்தகம் அந்த மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. அவற்றை விட மாணவர்கள் மெடல் அணிவித்தும் பழைய மாணவர் சங்கத்தால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட புத்தகங்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்கள். தொடர்ந்து தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்கள் மெடல் அணிவித்தும் அவர்களுக்கும் தலா 2500 ரூபாய் பெருமதியான வங்கிக் கணக்கு திறக்கப்பட்டு அதற்குரிய புத்தகமும் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வை அதிபர் பழைய மாணவர்கள் மூத்த ஆசிரியர்கள் நிகழ்த்தி வைத்தார்கள். தொடர்ந்து பாடசாலையில் ஆசிரியர்களது கலை நிகழ்வுகள், மாணவர்களது கலை நிகழ்வுகள், அதனைத் தொடர்ந்து நன்றி உரையுடன் நிகழ்வு இனிதே நிறைவடைந்தது. நன்றி, வணக்கம். |























































