புத்திசாலி பிரமனே ..............
அழகாய் படைத்தாய் பெண்ணை
இல்லை ....இல்லை ........இல்லை ......
என் காதலியை (யே )
என்னவளின் அழகிற்கு ஒப்பனையேது இவ்வுலகில்
கவிக்கு மறைவில்லை
புத்திசாலி பிரமனே .............. அழகாய் படைத்தாய் பெண்ணை இல்லை ....இல்லை ........இல்லை ...... என் காதலியை (யே ) என்னவளின் அழகிற்கு ஒப்பனையேது இவ்வுலகில்
0 Comments
"ஏங்குகின்றோம் "
கருவுற்ற மண்ணில் மூவெட்டாண்டாக நாமில்லை நீதியின் முன் கண்ணீர்ப்பூக்களாக தவம் கிடக்கின்றோம் நீதி தேவதையும் மலர்கின்றாள்யில்லை மீள்குடியேற ஈரநெஞ்சு உள்ளம் எவரையும் மூவெட்டாண்டாக காணவும்மில்லை பெண் பெருமைக்குயுரியவள் பெருமையோடு போற்றக்கூடியவள் தாயாகக்கூடிய வரம் கொண்டவள் அன்பையே வரப்பிரசாதமாக கொண்டவள் ஓடும் உலகின் அச்சாணியாக அவதாரம் கொண்டவளே அகிலமும் ஆண்டிடும் அன்பை இயல்பாக கொண்டவளே பரந்த பூமியில் வளர்ந்திடும் பணமோகத்தில் ... போட்டிகளில் ....... பொறாமைகளில் ..... பெண்ணே உன்னையிழந்துவிடாதே உன் உயர்வுக்கு நீ தடைக்கல்லாகாதே உடைத்துவிடு உன் மனக்கோட்டைகளை நியக்கோட்டைகளில் நின்மதிகளை நிலைக்கவிடு உன் கால்லடிகளில் வந்து விழும் புகழ்மாலைகள் " பூ" மொட்டாகயிருக்கையில் பூமாதேவியில் அழகாகயொலிக்கின்றேன் பூவாகயிருக்கையில் தேனீக்களுக்கு தேனாகயினிக்கின்றேன் பூத்துக்குலுங்க்கியதும் தெய்வங்களுக்கு அர்ச்சனைப் பூவாகின்றேன் எஞ்சிய பூக்களில் பெண்களுக்கு கொண்டைபூவாகின்றேன் கல்யாணவீடுகளில் மாற்றுமாலையாகின்றேன் மரணவீடுகளில் மலர்வளையமாகின்றேன் அன்பை பரிமாறுபவர்களுக்கு காதல் தூதுவனாகின்றேன் காய்ந்த பின்பு சருகுகளாகின்றேன் சருகுகலாகிய பின்பு குப்பை தொட்டிகளில் தூங்குகின்றேன் மானிடமே என் வாழ்க்கையை பார் ...... நீயும் ஒரு நாள் குப்பை தொட்டிதான் ? நன்றி மயிலை ச .சாந்தன் "விபச்சாரி"
வயிற்றுப்பசிக்காக தன்னையே சிதைத்துக்கொள்பவள் பூ மன(ண )ம் கொண்ட பாவையவள் சில்லறைக்காக சிரித்துக்கொள்பவள் தலைவணங்கும் பெண்குலத்துக்கே அவமானச்சின்னமாக இருப்பவள் ஒரு சாண் வயிற்றுக்காக ஜென்மத்திற்கும் பாவியாக பிறப்பெடுப்பவள் "அகதிகளின் உள்ள குமுறல்" சொந்தமாயிருந்த வீடு இழந்து சொத்தேயென்று இருந்த கல்வியிழந்து சொர்க்கமேயென்று இருந்த மண் இழந்து சொந்தமில்லா அன்னிய தேசத்தில் சொல்லொணா துயருடன் அகதியெனும் பட்டத்துடன் வாரிவாரி அணைத்த சொந்தங்களை பிரிந்து வாசமில்லா தேசம்வர பணத்தினை அள்ளியள்ளி கொடுத்து வானவில் பார்த்து இரசித்த வானத்தில் வானப்பறவை மூலம் பறந்து வானகத்து தேசம் வந்தோம் மெழுகுபோல் உருகும் தமிழினத்துக்கு புத்துணர்வுதரும் ஆண்டாக வருக! நெஞ்சைத்தொட்டு மோதியெழும் -நம் துன்பங்கள் மூழ்கிடும் ஆண்டாக வருக! தொலைந்த உறவுகளை தேடும் உறவுகளுக்கு நல்உறவாடும் ஆண்டாகவருக! வாழ்க்கை தொலைந்த பெண்குலங்களுக்கு வசந்தம் வீசும் ஆண்டாகவருக! ஏதிலிகளாக புலம்பெயர் தேசங்களில் புலம்பும் ஆத்மாக்களுக்கு ஆதரவுதரும் ஆண்டாகவருக! "மயிலை மண்ணுக்கு ஒரு மடல்"
துன்பத்தில் ஒரு மடல் சொந்த தேசத்தில் துவளும் என் தாயே (மயிலை மண்ணே )உனக்கு ஆருயிர் அன்னையே நீ உன் அன்பு செல்வங்களை எண்ணி அழுகிறாயா -இல்லை உன் மழலைகளின் அன்பிற்கு ஏங்குகிறாயா - அறியதுடிக்கிறேன் என் அன்னையே "தூரதேசம்"
தூரதேச கனவுகளில் தொலைந்து போனவர்கள் அல்ல நாம் துயரம் போக்க தூக்கம் தொலைத்தவர்கள் நாம் அலாரமணிகளில் எழுந்தவர்கள் அல்ல நாம் சூரியனின் அரவணைப்பில் விழித்தவர்கள் நாம் கல்வியே மூலதனமென கற்றவர்கள் நாம் பரதேசியாக நம் உயிர்காக்க கடல் கடந்தவர்கள் நாம் இரவல் தேசத்து இருப்பிட அனுமதிபெற வரிசையில் ஆடு மாடு போல கிடந்தவர்கள் நாம் வெடிகுண்டு
உன் பெயர் உச்சரிக்கவே அச்சம் எச்சரிக்கை எச்சரிக்கையே உன் தோற்றம் புன்னகைகளை பறிக்கும் கொடூரன் நீ இரத்தவாசனை முகரும் இரத்தக்காட்டேறி நீ காதலில் வாழும் மனிதர்களை இரக்கமின்றி கொலைசெய்யும் கொலைகாரன் நீ "சிந்தனை வரிகள் நமக்கு"
உழைப்பில் வித்தகர்களாக இருந்திடல் வேண்டும் எல்லோரையும் சிரிக்க வைப்பதில் வல்லவராக இருந்திடல் வேண்டும் வார்த்தைப் பிரயோகங்களில் கவனமாய் இருந்திடல் வேண்டும் இழிவுத்தன்மைகளை ஒழித்திடல் வேண்டும் கல்லறைகளை பூசித்துவிடல் வேண்டும் கடமைகளை தவறாமல் செய்திடல் வேண்டும் |
பதிவுகள்
September 2014
முழுப்பதிவுகள் |