23.12.1964ல் மிகப் பெரிய சூறாவளிப்புயல் தாக்கியதில், மயிலிட்டிப் படகுகளில் சென்றவர்களில் கடலில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 153 பேர் வரை எனத் தகவல் உள்ளது. மயிலிட்டி மீனவர்களின் படகுகள் பருவகால மீன்பிடித்தலுக்காக தீவுப் பகுதிகளுக்குச் செல்வது வழக்கம்.
இதில் எமது ஊரைச் சேர்ந்தவர்கள் 56 பேர் வரை மரணத்தை எய்தியவர்கள். ஏனையோர் எமது ஊர் படகுகளில் தொழில் புரிந்தவர்கள் என்று அறிய முடிகின்றது.

இயற்கை அனர்த்தங்கள் அதிகம் காவு கொள்வது மீனவக் குடும்பங்களை தான் என்பதற்கு சுனாமி போன்ற எத்தனையோ ஆழிப் பேரழிவுகளை பட்டியலிடமுடியும்.
தொழில் நிமிர்த்தம் படகேறிச் செல்லும் குடும்பத் தலைவர்கள் இவ்வாறான அனர்த்தங்களில் இறக்கும் போது அவர்களது குடும்பங்கள் பொருளாதார ரீதியாக பல கஷ்டங்களை எதிர் நோக்குகின்றார்கள். அவ்வாறு இந்த 153 பேரின் குடும்பங்களும் பெரும் துயரங்களை கடந்து வந்திருப்பார்கள்.
இப்பொழுது அவர்களுடைய அடுத்த தலைமுறையும் முதுமையடைந்திருப்பார்கள்.
மயிலிட்டி என்கின்ற சிறிய கிராமம் கடல் வளத்தால் பொருளீட்டிய பெருமைக்குரிய கிராமம் ஆகும். அறுபது வருடத்திற்கு முன்னரே இக் கிராமத்தைச் சேர்ந்த பலர் சம நேரத்தில் கடலில் நின்றார்கள் என்றால் அவ்வூரின் வருமானம் எப்படி இருந்திருக்கும் என நினைத்துப் பாருங்கள்.
1964ல் இவ் அனர்த்தம் நிகழ்ந்து 26 வருடங்களில் அதாவது 1990ல் மயிலிட்டி இடப் பெயர்வு நிகழ்கின்றது.தன் ஊரவர்கள் இடம் பெயரும் வரை அவர்களை செல்வந்தர்களாகவே கடலன்னை வைத்திருந்தாள்.
மயிலிட்டியின் கடல் வளத்தை எம்மவரின் பாரவூர்திகள் பல தினமும் தெற்கிற்கு எடுத்துச் சென்றது. இலங்கையின் மீன்பிடித் துறைமுகங்களில் மயிலிட்டி சிறப்பிடம் பெறுகின்றது. மயிலிட்டி மீன்பிடித்துறைமுகம் இன்று ஊரவர்களின் கைநழுவிச் செல்வதை அவதானிக்க முடிகின்றது.பாதுகாப்பு வலயம் பிடியில் இருக்கின்றது. அதை விடுவிக்கின்றோம் என்ற தொனியில் எம்மவர்கள் பல அமைப்புகளாக பிரிந்து நின்று செயல்படுகின்றார்கள்.இது வரையில் பலனேதும் இல்லை.
அன்று தெற்கிற்கு எம்மவர்களால் பிடிக்கும் மீன்கள் சென்றது.இன்று தெற்கில் இருப்பவர்களே மயிலிட்டி துறைமுகத்தை ஆக்கிரமித்து எம்மவர்களின் கடல் வளத்தை எம் முன்னே சுறண்டிச் செல்வதை கண் கூடாக பார்க்கக் கூடியதாகவுள்ளது.
நாம் எங்கள் கடல் வளத்தை காப்பாற்ற வேண்டும்.எமது ஊரவர்கள் இதற்கு கொடுத்த விலை அதிகம். சிந்தித்து செயலாற்றுங்கள்.
23.12.1964 அன்று ஏற்பட் சூறாவளிப் புயலில் இறந்தவர்களின் விபரங்கள் சில என்னால் சேகரிக்கப் பட்டவை உள்ளன அவற்றை கீழே தருகின்றேன்.